search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில் பிரதிஷ்டை விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    கோவை மாவட்டத்தில் பிரதிஷ்டை விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • நாளை முதல் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க ஏற்பாடு
    • ஆற்றுப்பகுதியில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் செய்து வருகின்றனர்

    கோவை,

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி கோவை மாநகரில் 676 சிலைகள், புறநகரில் 1,611 சிலைகள் என மாவட்டத்தில் மொத்தமாக 2,287 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை யொட்டி மாநகரில் 2,500 போலீசார், புறநகரில் 2 ஆயிரம் போலீசார் என மொத்தம் 4,500 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய, விடிய ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலைகள் முன்பு தலா ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    கோவை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (புதன்கிழமை) மற்றும் 22-ந் தேதி ஆகிய நாட்களில் நடந்கிறது. கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி, குனியமுத்தூர், வெள்ளக்கி ணறு, வடவள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள குளங்க ளிaல் கரைக்கப்படுகிறது. 22-ந் தேதி முத்தணங்குளத்தில் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாந கரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள் ளது. இது குறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கக்கூடாது. பொள்ளாச்சியிலிருந்து உக்கடம் வரும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் ஈச்சனாரி சர்வீஸ்ரோடு வழியாக சென்று ஈச்சனாரியில் யுடர்ன் செய்து செட்டிப்பாளையம் ரோடு வழியாக ஜி.டி டேங்க், ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் சென்றடையலாம்.

    பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி செல்லும் இலகுரக வாக னங்கள் ஈச்சனாரி, தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதா மில் ரோடு ரெயில் கல்யாண மண்டம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்லலாம்.

    உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடது புறமாக திரும்பி போத்த னூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, செட்டி பாளையம் ரோடு, ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

    உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சாரதாமில் ரோடு வழியாக பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் கனரக வாக னங்கள் மற்றும் பஸ்கள் அனைத்தும் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக அசோக் நகர் ரவுண்டானா, பள்ளியின் இடது புறமாக திரும்பி சிவாலயா சந்திப்பு பேரூர், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்ல லாம். உக்கடத்திலிருந்து குனிய முத்தூர் வழியாக பாலக் காடு நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலைவழியாக அசோக் நகர் ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி புட்டு விக்கி ரோடு வழியாக பாலக்காடு நோக்கி செல்லலாம்.

    பாலக்காடு சாலையிலி ருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனம் மற்றும் பஸ்கள் பாலக்காடு ரோடு, கோவைப்புதூர் பிரிவில் இடது புறமாக திரும்பி கோவைப்புதூர் ஆசரமம் பள்ளி, பேரூர், செல்வபுரம் சிவாலயா சந்திப்பு வழியாக செல்வபு ரம் மேல்நிலைப் பள்ளியின் வலது புறமாக திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    இலகுரக வாகனங்கள் கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், கண்ணாம்பு காளவாயில் இடது புறமாக திரும்பி, புட்டுவிக்கி சாலை, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×