என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
விளாத்திகுளத்தில் புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கம்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- சிப்பிகுளம் பொதுமக்கள் விளாத்திகுளத்தில் இருந்து பஸ் வசதி செய்து தர மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
- புதிய வழித்தட பஸ்கள் இயக்கத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிகுளம் கிராம பொதுமக்கள் விளாத்திகுளத்தில் இருந்து பஸ் வசதி வேண்டுமென்றும், அதேபோல் என்.வேடப்பட்டி கிராம பொதுமக்கள் விளாத்திகுளத்தில் இருந்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க தொடக்க விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. புதிய வழித்தட பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அழகர்சாமி, விளாத்திகுளம் பணிமனை மேலாளர் மாடசாமி, பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், பேரூராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்ன மாரிமுத்து, ராமசுப்பு வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், இம்மானுவேல், சமுக வளைதல பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






