search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே கூடுதல் வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    கூடுதல் வழித்தடத்தில் அரசு பஸ்சை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியைசைத்து தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம் அருகே கூடுதல் வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • பஸ் சேவையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்கள், மாணவர்கள் பஸ்சுக்கு மாலை, வாழை மரங்கள் கட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் இருந்து குளத்தூர் வழியாக முத்துக்குமாரபுரம் வரை விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் குளத்தூர் பகுதியில் இருந்து அதிகளவிலான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    விளாத்திகுளம் - முத்துக்குமாரபுரம் வழித்தடத்தில் மட்டுமே சென்று வரும் இந்த பஸ்சை கூடுதலாக வீரபாண்டிய புரம், டி.சுப்பையாபுரம், முத்துராமலிங்கபுரம் வரை நீட்டிப்பு செய்தால் இக்கிரா மங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்டநாட்களாக மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், முத்துக்கு மாரபுரம் வரை மட்டுமே சென்று வந்த இப்பேருந்தை வீரபாண்டியபுரம், டி.சுப்பையாபுரம் வழியாக முத்துராமலிங்கபுரம் வரை நீட்டிப்பு செய்து பஸ்சை இயக்க உத்தரவிட்டு கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் சேவையை மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் சேவையை முன்னிட்டு பஸ்சுக்கு மாலை, வாழை மரங்கள் கட்டி பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெகநாதன், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மாவட்ட கவுன்சிலர் மிக்கல் நவமணி, நடராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், குருநாதன் செந்தூர்பாண்டி, குளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டி, வீரபாண்டியபுரம் ஊராட்சிமன்ற தலைவர் லெக்கமாள் தேவி, வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ், நெடுங்குளம் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயலட்சுமி, டி. சுப்பையாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ராமசுப்பு, வைப்பார் ஊராட்சிமன்ற தலைவர் ராமர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய சிறுபான்மையினர் அணி செல்வின் ஒன்றிய இலக்கிய அணி மாரியப்பன், மாணவரணி அமைப்பாளர் முனியசாமி, கிளைச் செய லாளர்கள் மந்திரமூர்த்தி, முனிய சாமி, பொன்னு ச்சாமி, ரவிச்சந்திரன், பொன் மாரியம்மன், பரம சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×