என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலநீலிதநல்லூர் கோவில் விழாவில் தி.மு.க. சார்பில் பக்தர்களுக்கு பழங்கள், நீர், மோர்
    X

    ராஜா எம்.எல.ஏ நிகழ்ச்சியை தொடங்கிய வைத்த காட்சி.


    மேலநீலிதநல்லூர் கோவில் விழாவில் தி.மு.க. சார்பில் பக்தர்களுக்கு பழங்கள், நீர், மோர்

    • மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் கிளை கழகம் சார்பில் நீர், மோர் மற்றும் 2ஆயிரம் கிலோ பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ராஜா எம்.எல்.ஏ. பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரில் சிவஞான வெளியப்ப சாஸ்தா கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் கிளை கழகம் சார்பில் நீர், மோர் மற்றும் 2ஆயிரம் கிலோ பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவிஜயன், கிளை செயலாளர், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டியன், வர்த்தக அணி செந்தில்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயபாண்டியன் மற்றும் மகேந்திரன், இளைஞர் அணி கார்த்திக், வீராச்சாமி தகவல் தொழில்நுட்ப அணி வீமராஜ், சிவாஜி, சுபாஷ் சந்திர போஸ், குருசாமி, ராமர்பாண்டியன், மேலநீலிதநல்லூர் கிளை நிர்வாகிகள், நாட்டாமை வெள்ளத்துரை, அவை தலைவர் கருப்பசாமி, முத்துப்பாண்டியன், முருகன், சுரேஷ், தாமஸ், விஜயகுமார், குமாஸ்தா முருகன் செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×