search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பெண்கள் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
    X

    இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    அரசு பெண்கள் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

    • மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
    • இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை ஆளுநர் தமிழ்மணி, 2-ம் துணை ஆளுநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரிமா சங்க செயலாளர் வினோத் வரவேற்றார். செயலாளர்( சேவை) சரவணன் அறிமுக உரை யாற்றினார். முகாமில் மாவட்ட கண்ணொளி திட்ட தலைவர் விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தார். ஜி. எல்.டி. ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியின் சேர்மேனும் ,லியோ கிளப்ஸ் மாவட்ட தலைவருமான பழனியாண்டி, உன்னியூர் எஸ்.எஸ்.பாலிடெக்னிக் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் , மாவட்ட தலைவருமான டாக்டர் செந்தில்ஆண்டவன், மோகனூர் அரிமா சங்க கண்ணொளி திட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன், மாவட்ட தலைவர் ராமலிங்கம் ,மண்டல தலைவர் தனபால், வட்டாரத் தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முகாம் முடிவில் பொருளாளர் என்ஜினியர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பெண்கள் மேல் நிலைப்பள்ளிப் பள்ளியில் இருந்து பேருந்து மூலம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    Next Story
    ×