என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கபட்ட போது எடுத்த படம்
நாசரேத் பெண்கள் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா
- நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது
- மொத்தம் 220 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது
நாசரேத்:
நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மாசில்லா வரவேற்றார். மொத்தம் 220 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல் என்ற தம்பு, வார்டு கவுன்சிலர்கள் அதிசய மணி, சாமுவேல், காமா ஜெபக்குழு நிறுவனர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






