என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாரிமுத்து எம்.எல்.ஏ வழங்கினார்.
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
- பாடப் பகுதிகளை அன்றைய தினமே புரிந்து படித்து எழுதி பார்த்தல் வேண்டும்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார்.
ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாணவர் நல் நூலகர் ஆசைத்தம்பி வரவேற்றார்.
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாரிமுத்து எம்.எல்.ஏ. வழங்கி பேசுகையில்:-தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் பல்வேறு விதமான ஊடகங்களை பயன்படுத்தி கல்வியில் மட்டுமல்லாது சமுதாய சேவைகள் சமுதாயத்தோடு பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படுதல் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளுதல் அன்றைய தினம் நடத்தப்படும் பாடப் பகுதிகளை அன்றைய தினமே புரிந்து படித்து எழுதி பார்த்தல் வேண்டும்.பெற்றோர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் .
விளையாட்டு, கலை இலக்கியம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறும் வகையில் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முறையான பயிற்சி கடுமையான முயற்சியின் மூலம் அனைவருமே அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருக்க வேண்டும் என்றார். முடிவில் ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.