search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் 121 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்
    X

    பாளை கோட்டூர் மதரஸா பள்ளிவாசலில் நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

    நெல்லையில் 121 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

    • தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
    • இதனால் இன்று 1.000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இன்று 1.000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    121 முகாம்கள்

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று 121 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பள்ளிகளில் நடந்த முகாம்களில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டது. அதிக வெப்பநிலை இருந்தவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் மாணவ- மாணவிகள் காய்ச்சல் அதிகமாக இருந்தால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

    மாநகரப் பகுதியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் பள்ளிகளில் சென்று மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்த குழுவில் மருந்தாளுனர்கள், செவிலியர்கள் இருக்குமாறு அமைக்கப்பட்டு இருந்தது. மாநகர பகுதியில் பாட்டப்பத்து ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வெள்ளம் தாங்கி பிள்ளையார் கோவில் தெரு, டி.எம்.சி. காலனி ஆகிய இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

    பேட்டை பகுதியில் பாரதியார் உயர்நிலைப்பள்ளி உள்பட 4 பள்ளிகளிலும், கருவேலம் குண்டு தெரு, பாளை மனக்காவலம் பிள்ளை நகர், ரஹ்மத் நகர், பொதிகை நகர், ஆமீன் புரம், ராஜீவ் காந்தி நகர், காயிதே மில்லத் பள்ளி அருகில் மற்றும் ஏராளமான இடங்களில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து காய்ச்சல் பரிசோதனையை மேற்கொண்டனர்.

    Next Story
    ×