search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி சீட்டு விற்ற தந்தை- மகன் கைது
    X

    லாட்டரி சீட்டு விற்ற தந்தை- மகன் கைது

    • போலீசார் விரட்டி சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர்.
    • 3 செல்போன்கள், 2 பில் புக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி வாசல் வடக்கு தெருவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் பல ஏஜென்டுகளை நியமனம் செய்து, ஆன்லைன் லாட்ட ரிகளை விற்று வருவதாக போலீசா ரக்கு தகவல் வந்தது.

    தகவலின் பேரில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில், எஸ் எஸ் ஐ புரட்சிமணி மற்றும் போலீசார் ராஜ்கண்ணன் என்பவர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மறைந்திருந்து கண்கா ணித்தனர்.

    அப்போது போலீசை பார்த்ததும் 3 பேர் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.

    விசாரணையில் அவர்கள் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு, நேரு நகர் பகுதியை சேர்ந்த உஸ்மான் (வயது 65) இவரது மகன் ஷாஜகான் (39) என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் மூன்று செல்போன்கள் இருந்தது.

    அதை சோதனை செய்து பார்த்ததில் 3 நம்பர் கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில ஆன்லைன் லாட்டரி எண்களை இணையதளம் மூலம் அனுப்பியும் அதற்கான பணத்தை இணையதளம் வாயிலாக பணம் பெற்றும் சட்ட விரோதமாக அரசு அனுமதி இன்றி விற்று வருவதாகவும் அந்த நம்பர் பதிய பெற்ற செல்போன் தங்களுடையது தான் அதில் ஒரு செல்போன் ஷாஜகானின் சகோதரி ரிகானா உடையது என்றும் தெரிய வந்தது.

    மேலும் தப்பியோ டியது ரிகானா என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் அவர்க ளிடமிருந்து 3 செல்போ ன்கள், 2 பில் புக், 2000 ரூபாய் பணம், ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×