search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி விவசாயிகள் வெளிநடப்பு
    X

    பருத்தி பஞ்சுகளை தலையில் கட்டியவாறு கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்.

    பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி விவசாயிகள் வெளிநடப்பு

    • பருத்தி பஞ்சை தலையில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையிலான விவசாயிகள் தலையில் பருத்தி பஞ்சுகளை கட்டி க்கொண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    பருத்தி குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் அறிவித்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் விவசா யத்திற்கு வாங்கிய தேசிய வங்கிகளின் கடன் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரம் மானியம் வழங்க வேண்டும்.

    டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் விலையை குறைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தினர்.

    இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×