search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

    • பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.
    • பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    எனவே நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக கொள்முதல் செய்ய நிரந்தர உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழையால் நெல் சாய்ந்து பாதிக்கப்படுவதால் அதற்கு ஏற்ற புதிய ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

    பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே சர்வே முடிந்த பிறகு தான் பருவம் தவறிய மழை பெய்தது.

    எனவே தற்போதைய நிலவரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×