என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்
  X

  விவசாயிகள் காதில் பூசுற்றி பட்டை நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசாயிகள் பட்டை நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  கபிஸ்தலம்:

  தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

  போராட்டத்தின் 50-வது நாளான நேற்று முன்தினம், விவசாயிகள் கோவிந்தா! கோவிந்தா ! சத்தமிட்டு பட்டை நாமம் போட்டு நூதன முறையில் முழக்கமிட்டனர்.

  இந்த நிகழ்விற்க்கு இப்போராட்டக்குழு செயலாளர் நாக.முருகேசன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

  வரும் 22-ம் தேதி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சுவாமிமலையில் நடைபெறவுள்ளது. அதில், சென்னையில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளையும், திரட்டிச் சென்று முற்றுகை போராட்டம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

  நூதன முறையில் நடை பெற்ற கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×