search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும்-துணை இயக்குனர் வேண்டுகோள்
    X

    உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும்-துணை இயக்குனர் வேண்டுகோள்

    • விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
    • விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் விதைச்சான்றுத் துறையினரால் சான்று செய்ய பெற்ற விதைகளை வாங்க வேண்டும். விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.

    சாக்குப் பைகளில் தமிழ்நாடு அரசு விதைச்சான்றளிப்புத் துறையால் சான்றளிக்கப்பட்ட ஆதார நிலை(வெள்ளைஅட்டை) அல்லது சான்றுநிலை(நீலநிற அட்டை)-ல் ஏதேனும் ஒன்றுடன் உற்பத்தியாளர் அட்டையும் சேர்த்து 2 அட்டைகள் பொருத்தப்பட்ட விதைகளை வாங்க வேண்டும்.

    விவர அட்டைகளில் விதையின் ரகம், உற்பத்தியாளர் முகவரி விதைச்சான்றளிப்புத் துறையின் முத்திரை காணப்படும். காலக்கெடு தேதியைக் கவனித்து, காலக்கெடு முடிவடையாத, விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.

    விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா, முக்கியமாக அந்தப் பருவத்திற்கு ஏற்ற ரகம்ரானா எனக் கவனித்து வாங்க வேண்டும்.

    விதை வாங்கும்போது விற்பனை ரசீது கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். விற்பனை ரசீதில், வாங்குபவர்கள் கண்டிப்பாக கையெழுத்திட்டு வாங்க வேண்டும்.

    விதையின் கொள்கலன் கிழிபடாமல் நன்றாக தைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ளதா எனக் கவனித்து வாங்க வேண்டும். விதை வாங்கும் போது மேற்கூறிய கருத்துக்களை கவனித்தில் கொண்டால், தரமான விதை கொண்டு அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×