என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலாந்துறையில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேங்காய்க்கு உரிய விலை கேட்டு, தேங்காயை உடைத்தனர்.
- போராட்டத்தில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வடவள்ளி,
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய்க்கு உரிய விலை கேட்டு தமிழகம் தழுவிய தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலந்துறை பகுதியில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க கோவை மாவட்ட துணைச் செயலாளர் வீராசாமி தலைமை தாங்கினார்.
சங்க மாநில துணைத்தலைவர் காளப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ஆறுச்சாமி, குப்புசாமி, மாவட்ட பொருளாளர் தங்கவேல், மாவட்டத் துணைத் தலைவர் சங்கரன், விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேங்காய்க்கு உரிய விலை கேட்டு, தேங்காயை தரையில் உடைத்து போராட்டம் நடத்தினர்.
மேலும் தேங்காய்க்கு கிலோவிற்கு 50 ரூபாய் தமிழக அரசு கொள்முதல் செய்திட வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோவுக்கு 140 ரூபாய் வழங்க வேண்டும். வன விலங்குகளால் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு உரிய காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






