என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் விவசாய சங்க நிர்வாகிகள், தொழிறாசங்கத்தினர் கருப்பு கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில் விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம்

    • ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய இணை அமைச்சரை உடனடியாக பதிவு நீக்கம் செய்ய வேண்டும்

    தஞ்சாவூர்:

    உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியரில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த மத்திய பா.ஜ.க இணை அமைச்சர் அஜய் மிஸ்ராடெனியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் இன்று

    அனைத்து தொழிற்சங்க ங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொ.மு.ச மாவட்ட செயலாளர் சேவியர், ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ஜெயபால், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட தலைவர் ரவி, ஏ .ஐ .சி. சி .டி .யூ மாவட்ட செயலாளர் ராஜன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் 9 பேரை காரை ஏற்றி கொலை செய்த மத்திய இணை அமைச்சரை உடனடியாக பதிவு நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கருப்பு கொடிகளை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.

    இதில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறி யாளர் பழனி ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாவட்ட தலைவர்கள் ராமச்சந்திரன் , செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பாஸ்கர், நிர்வாகி சுரேஷ், ஜனநாயக விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருணாச்சலம் , மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி ராமசாமி, தொமுச விவசாய அணி நிர்வாகிகள் கோவிந்தராஜ், சைவராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், தொமுச மாவட்ட தலைவர் செல்வராஜ், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் செல்வராஜ் ,அனைத்து சங்க நிர்வாகிகள் பாஸ்டின், கிருஷ்ணமூர்த்தி, குமரேசன், பாரி, நீல நாராயணன், விஜயகுமார், ராஜேந்திரன், கோவிந்தராஜன், துரை.மதிவாணன், அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா.லெ) தஞ்சை மாவட்ட மாநகர செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×