search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க வேண்டும்.
    • குறுவை சாகுபடிக்கு 34 டி.எம்.சி. காவேரி நீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவு இட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகா அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    அரவிந்தசாமி, மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செ ல்வம், பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் லோகநாதன், துணை அமைப்பாளர் மருது பாண்டியன், ஜெகதீஷ் விஜயலட்சுமி, பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பா ட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும், குறுவை சாகுபடிக்கு 34 டி.எம்.சி. காவேரி நீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவு இட வேண்டும்.

    குறுவைப் பயிரை காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் கோரிக்கைகள் அடங்கிய அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

    Next Story
    ×