search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணியில், விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் தலைவர் காந்தி பேசினார்.

    பேராவூரணியில், விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

    • பேராவூரணியில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
    • சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத் தலைவர் காந்தி தலைமை வகித்தார்.

    கௌரவ தலைவர் வேலுச்சாமி, துணை தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் ராம்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 25க்கு விற்ற தேங்காய் தற்போது ரூபாய் பத்துக்கு கீழ் விற்கப்படுகிறது.

    உற்பத்தி செலவுக்கு கூட கட்டுபடி ஆகாத விலையில் தேங்காய் விற்பதால், விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் அனைவரும் சமையல் உள்ளிட்ட அனைத்து தேவைக்கும் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    பேராவூரணி தொகுதி சென்னைக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், புவிசார் குறியீடு பெறுவதற்கு ஆதாரங்களை திரட்டி தருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அனைத்து அங்காடிகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், நாம் உழவர் இயக்க தலைவர் பிரபு ராஜா, மதுரை வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் வைரவன், தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலச் செயலாளர் அறந்தாங்கி செல்லத்துரை, வடகாடு மிளகு உற்பத்தி அறிமுக விவசாயி பாலுச்சாமி, கீரமங்கலம் நக்கீரர் தென்னை மைய நிறுவனர் காமராசு, திருச்சி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் இலக்குவணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    முடிவில் இணைச் செயலாளர் முகமது சமீர் நன்றி கூறினார்.

    Next Story
    ×