என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் ஊடு பயிராக  மரவள்ளி கிழங்கு, வாழை பயிரிட்டு விவசாயிகள் உற்சாகம்
    X

    உடன்குடி பகுதியில் ஊடுபயிராக மரவள்ளி கிழங்கு, வாழை பயிரிட்டு உள்ள காட்சி.

    உடன்குடி பகுதியில் ஊடு பயிராக மரவள்ளி கிழங்கு, வாழை பயிரிட்டு விவசாயிகள் உற்சாகம்

    • உடன்குடி பகுதியில் தென்னை, பனை விவசாயத்துடன் ஊடுபயிராக மரவள்ளி கிழங்கு, சப்போட்டா, வாழை, முருங்கை ஆகியன ஊடுபயிராக பயிரிட்டு விவசாயம் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.
    • சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயத்தையும் விரிவாக செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி பகுதியில் தென்னை, பனை விவசாயத்துடன் ஊடுபயிராக மரவள்ளி கிழங்கு, சப்போட்டா, வாழை, முருங்கை ஆகியன ஊடுபயிராக பயிரிட்டு விவசாயம் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.

    உடன்குடி வட்டார பகுதியில் தற்போது பருவமழை ஆங்காங்கே விட்டுவிட்டு பெய்வதால் உடன்குடி, வட்டார பகுதியான, பரமன்குறிச்சி, வெள்ளாளன்விளை, சீர்காட்சி, பிச்சிவிளை, வாகவிளை, மெய்யூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வறட்சியை தாங்கும் தென்னை, பனை விவசாயத்துடன் ஊடுபயிராக முருங்கை, மரவள்ளி கிழங்கு, வாழை, சப்போட்டா பயிரிட்டு விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

    மேலும் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயத்தையும் விரிவாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவிதமான குளத்து பாசனமோ, கால்வாய் பாசனமும் கிடையாது. முழுக்க முழுக்க கிணற்று நீர்பம்பு செட் பாசன மட்டும் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×