என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி மர்மச்சாவு
- தனது விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- வயலில் உள்ள போர் கொட்டகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை வட்டம், நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கன்னு (வயது 55). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் செல்லக்கண்ணுவை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் வயலில் உள்ள போர் கொட்டகையில் செல்லக்கண்ணு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து உறவினர்கள் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில் செல்லக்கண்ணு மரணத்தில் மர்மம் உள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
புகாரின் பேரில் போலீசார் செல்லக்கண்ணு உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story