search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை உணவு வழங்கும் திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம்
    X

    உருது தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.

    காலை உணவு வழங்கும் திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம்

    • காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.
    • 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது,

    1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்ட ச்சத்து நிலைபாதுகாக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தினை அறிவித்து செயல்படு த்தினார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராய ன்மலை வட்டாரத்திற்குட்ப ட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 14 அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 638 அரசுப்பள்ளிகளில் வருகின்ற 25-ந்தேதி முதல் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    இத்திட்டம் விரிவுபடுத்துவதற்கான முன்னோட்டமாக தியாகது ருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் (பெண்கள்) நடத்தப்பட்டது. காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு சமைக்கப்பட்டு சரியாக நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டு மென தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுந்தராஜன், உதவி திட்ட அலுவலர் மாதேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலை வர் சங்கர், தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×