என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய போது எடுத்த படம்.
தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற நல்லாட்சிக்கு முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

- தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- கனிமொழி எம்.பி. ஆன பிறகு பல பணிகள் நடைபெற்றுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் எதிரில் நடைபெற்றது.
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் மாநக ராட்சி மண்டல தலைவ ருமான வக்கீல் பாலகுருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், சங்கர், மாநகர துணை அமைப்பாளர்கள் டைகர் வினோத், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-
குருஸ்பர்னாந்துக்கு அரசு விழா மற்றும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் பேசியது குறிப்பில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் அரசு விழா எடுக்கப்படும் என்று அறிவித்தது. மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது.
எம்.பி. தேர்தலின் போது கனிமொழியும் வாக்குறுதி கொடுத்தார். அதன் அடிப்படையில் மணி மண்ட பம் கட்டப்படும் அறிவிப்பை முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி அவர்களது வாரிசு மற்றும் சமுதாய மக்கள் ஆதரவுபடி எம்.ஜி.ஆர். பூங்காவின் ஓருபகுதியில் அமைக்கப்படுகிறது. இதை கூட மறந்து அ.தி.மு.க.வினர் ஏதேதோ பேசுகிறார்கள்
தன்னை முதல்-அமைச்சராக்கிய சசிகலாவையே யாரென்று தெரியாது என்று கூறிய எடப்பாடிக்கு மக்களைப்பற்றி சிந்திக்கும் எண்ணம் கிடையாது.
10 வருட அ.தி.மு.க. ஆட்சியில் ரூரல் பகுதிகளில் எந்த பணியும் நடைபெற வில்லை. கனிமொழி எம்.பி. ஆன பிறகு பல பணிகள் நடைபெற்றுள்ளன. கோவை, மைசூர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தூத்துக்குடி வளர்ச்சிக்கு பர்னிச்சர் பார்க் மற்றும் இரண்டு தொழில் நிறுவனங்கள் வரவுள்ளது. உப்பளத் தொழிலாளர்களுக்கு மழை காலங்களில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்லூரி உதவித்தொகையாக புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 வழங்கப்படுகிறது.
கல்விக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு துணையாக இருப்ப வர்களுக்கு மட்டும் பல உதவிகளை செய்து தமிழ கத்தை புறக்கணிக் கின்றன. தமிழகத்தில் நடை பெறுகின்ற நல்லாட்சிக்கு முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் வெங்கடபதி, மாநில பேச்சாளர் துரைபாண்டி, மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செய லாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா, ஜான் அலெக் சாண்டர், ராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராம கிருஷ்ணன், மேக நாதன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
