என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள தொட்டிபாளையம் ரெயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை பற்றி அடையாளம் தெரியாமல் இருந்தது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருந்தனர். இறந்த வாலிபரின் இடது மார்பில் ஷீலா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.

    மேலும் வலது கை முன் பகுதியில் ஜி என்ற எழுத்து பச்சை குத்தப்பட்டு இருந்தது.  இதை அடையாளமாக வைத்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் இறந்த வாலிபர் கரூரை சேர்ந்த கவுதம் (வயது 29) என்றும், அவருக்கு திருமணமாகி ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர் என்பதும் கவுதம் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளதும் தெரிய வந்தது.

    சம்பவத்தன்று கவுதம் திருப்பூருக்கு வேலை வி‌ஷயமாக சென்று உள்ளார். பின்னர் கரூர் வருவதற்காக ரெயிலில் வந்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்த தால் அவர் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டு வந்துள்ளார்.

    ரெயில் ஈரோட்டை தாண்டி தொட்டிபாளையம் வந்த போது எதிர்பாராத வகையில் கவுதம் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளது தெரியவந்தது.

    பங்களா புதூர் அருகே டயர் வெடித்து நடுரோட்டில் ஓடிய அரசு பஸ்சை டிரைவரின் சாமர்த்தியத்தால் கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி பங்களாபுதூர் வழியாக ஒரு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பங்களா புதூர் அருகே ஒரு தனியார் பாலிடெக்னிக் பிரிவில் பஸ்சை நிறுத்த டிரைவர் ‘‘பிரேக்’’ போட்டார். அப்போது அந்த பஸ்சின் முன்பக்க டயர் டியூப்புடன் படார் என்ற சத்தத்துடன் வெடித்தது. இந்த சத்தத்தை கேட்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    டிரைவர் உஷாராகி பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தினார். பஸ்சை நிறுத்தும்போது டயர் வெடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேசமயம் அந்த பஸ் ஓடிக் கொண்டிருக்கும்போது வெடித்திருந்தால் பெரும் விபரீதம் நடந்திருக்க கூடும் என அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    சென்னிமலை கென்னடி வீதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 52). இவரது மனைவி கமலவேணி(49).

    வடிவேல் சம்பவத்தன்று சென்னிமலை-காங்கேயம் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகில் ரோட்டோரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னாடி வந்த லாரி ஒன்று எதிர்பாராத வகையில் வடிவேல் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் இடுப்பு, கால்களில் பலத்த அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புவன்ஸ் மூலம் சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. எனினும் சிகிச்சை பவனின்றி வடிவேல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வடிவேல் உடலை அவரது மனைவி பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கோபி அருகே திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால் நர்சு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கோபி:

    கோபி அருகே வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் குமார். இவர் இறந்துவிட்டார். இவரது மகள் மைதிலி (வயது 22). கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மைதிலி நர்சாக பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் பெயர் அம்சவள்ளி.

    மைதிலிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து வந்தது. இந்த திருமணத்தில் மைதிலிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மைதிலி மனவேதனையில் இருந்தாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மைதிலி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? ஏன் திருமணம் பிடிக்கவில்லை? என்று தெரியவில்லை. இதுகுறித்து மைதிலியின் தாயார் அம்சவள்ளி கோபி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்கொலை செய்து கொண்ட நர்சு மைதிலி உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.
    கனமழையால் பவானிசாகர் அணை நீர்மட்டம் ஓரே நாளில் 3 அடி உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 1740 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நிர்மட்டம் 43.24 அடியாக இருந்தது.

    இந்நிலையில் ஊட்டி மலை பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்தது.

    நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 316 கனஅடி தண்ணீர் வீதம் வந்து கொண்டிருந்தது.

    தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்ததால் ஒரே நாளில் அதாவது நேற்று இரவு 3 அடி உயர்ந்து உள்ளது.

    இன்று (வியாழக்கிழமை) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தது.

    தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வருவதால் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவானிசாகர் அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோபியில் திருமணம் பிடிக்காததால் மனவேதனையில் இருந்த நர்சு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோபி:

    கோபி வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் குமார். இவர் இறந்து விட்டார். இவரது மகள் மைதிலி (வயது 22).

    கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மைதிலி நர்சாக பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் பெயர் அம்சவள்ளி.

    மைதிலிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து வந்தது. இந்த திருமணத்தில் மைதிலிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மைதிலி மனவேதனையில் இருந்தாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மைதிலி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? ஏன் திருமணம் பிடிக்கவில்லை? என்று தெரியவில்லை. இதுகுறித்து மைதிலியின் தாயார் அம்சவள்ளி கோபி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்கொலை செய்து கொண்ட நர்சு மைதிலி உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு அருகே ரெயில் நிலைய தண்டவாளத்தில் இருந்த வாலிபர் பிணம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள தொட்டிபாளையம் ரெயில் நிலைய தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணம் இருந்தது. அவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. ரெயிலில் அடிபட்டு அவரது உடல் சிதறி கிடந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த வாலிபர் பச்சை கலர் பனியன் சட்டையும், சாக்லட் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இடது மார்பில் ஷீலா என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இதே போல் வலது கையில் ஜி என்ற பச்சையும் குத்தப்பட்டிருந்தது.

    ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டம் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியானதற்கு காரணமான வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்தவர் பிரகாசம் (வயது 54). வெள்ளி திருப்பூரில் தனது மைத்துனர் இறந்த சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 25-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றார். பிறகு அங்கிருந்து பணிக்கு நம்பியூர் போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    இவர் கோபி அருகே அத்தாணி ரோட்டில் கருங்கரடு என்ற இடத்தில் ஒருவளைவில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மூளை சிதறி பலியானார்.

    இந்த விபத்து தொடர்பாக கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள் விபத்து நடந்த அத்தாணி ரோட்டில் உள்ள வீடுகள் மற்றும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதிய வாகனம் பற்றி துப்பு துலக்கி வந்தனர்.

    அப்போது விபத்து நடந்த சமயத்தில் அத்தாணியில் இருந்து கோபிக்கு செங்கல் ஏற்றி சென்ற ஒரு லாரியின் டிரைவர் விபத்து நடந்த சமயத்தில் எட்டிப் பார்த்து உள்ளார். இதை கண்டு உஷாரான தனிப்படை போலீசார் அந்த லாரி டிரைவரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் விபத்து நடந்த விபரத்தை கூறும் போது:-

    விபத்து நடந்த சமயத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மோட்டார் சைக்கிளில் வந்தபோது 9 மோட்டார் சைக்கிள்களில் கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் வேகமாக சென்று உள்ளனர்.

    அப்போது அத்தாணி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் அருண் பிரனேவ் முதலில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார்.

    அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில் நிலை தடுமாறிய சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் ரோட்டில் விழுந்த போது பின்னால் கோவை பீளமேட்டை சேர்ந்த கவுதம் சித்தா என்ற மாணவன் வந்த மோட்டார் சைக்கிள் சப்-இன்ஸ்பெக்டர் தலை மீது ஏறி சென்று உள்ளது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பலியாகி உள்ளார்.

    மேற்கண்ட தகவலை அந்த லாரி டிரைவர் தான் பார்த்ததை போலீசில் வாக்குமூலமாக கொடுத்து உள்ளார்.

    இந்த வழக்கில் திறமையாக விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட அருண் பிரனேவ், மற்றும் கவுதம் சித்தா ஆகிய 2 மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமாவை தொடர்ந்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையினர் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்க கூடாது. அவர் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக சிறுபான்மை துறை தலைவர் அஸ்ஸாம் பாஷாவுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் சுரேஷ், துணை தலைவர்கள் பாட்சா, அர்சத் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் ஒரு மனு அனுப்பி உள்ளனர்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதே தனது குறிக்கோளாக கொண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செயலாற்றி வந்தார். தலைவர் பதவியில் நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து இது நாள் வரை அவர் முழு நேரமும் தனது உடல் நிலையை பற்றி கூட கவலைப்படாமல் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும், ராகுல் காந்தியை தமிழகத்துக்கு அழைத்து வந்தும் பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்தி உள்ளார்.

    மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இளங்கோவன் இருந்து வந்தார்.

    கட்சிக்கு நெருக்கடியான நேரத்தில் இவர் கட்சிக்கு தேவைப்படுவார். இவர் தலைவராக இருந்த போது த.மா.காவை காங்கிரசில் இணைய வைத்தார். பிறகு மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்ட போது, இந்த இக்கட்டில் இருந்து காங்கிரசை காப்பாற்ற இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

    தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நீடித்தால் கட்சி மேலும் பலம் பெற்று உயிரோட்டமாக இருக்கும் .எனவே இளங்கோவன் ராஜினாமாவை ஏற்காமல் அவரை தொடர்ந்து கட்சி பதவியில் நீடிக்க கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதை வலியுறுத்தி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையினர் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 43 அடியை தாண்டியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இதில் 15 அடி சேறும்-சகதியும் கொண்டது. 105 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் அடியோடு சரிந்தது. 29 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணை நிரம்ப வேண்டி பவானிசாகர் அணை பகுதியிலேயே யாகவேள்வியும் நடந்தது.

    இந்தநிலையில் நீர்பிடிப்பு பகுதியில் குளிர் காற்று வீசி மழை பெய்ய தொடங்கியது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானது.

    படிப்படியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து 40 அடியை தொட்டது. கடந்த 2 நாட்களாக ஊட்டிமலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு 1740 கன அடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 43 அடியை தாண்டி 43.24 அடியாக இருந்தது.

    நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலையில் இன்றும் கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.

    இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணையின் மேல்பகுதியில் நடந்த யாக வழிபாட்டால் தற்போது மழை பெய்து அணைக்கு கூடுதல் தண்ணீர் வருகிறது என ஆன்மீகவாதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
    உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மொடக்குறிச்சி பேரூராட்சி, ஆனந்தம் பாளையம் ஊராட்சி பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். செல்லாத்தாபாளையம், மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் எம்.எல்.ஏவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    அவர் பேசும்போது, ‘‘அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்படும் அனைத்து அரசு திட்டங்களும் ஏழை - எளிய மக்களுக்கு சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. முறைப்படி அனைவருக்கும் நலத் திட்டங்கள் கிடைக்கும். வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

    மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் காகம் மணி, ஒன்றிய மகளிரணி செயலாளர் காந்திமதி, மொடக்குறிச்சி ஒன்றியக்குழு துணை தலைவர் கணபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் மயில் என்கிற சுப்பிரமணி, மணி என்கிற சண்முகம், ஆவின் இயக்குனர் அசோக், ஏ.பி.டெக்ஸ் தலைவர் பூவை தமிழன், ஆனந்தம்பாளையம் ஊராட்சி செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அரச்சலூர் பகுதியிலும் சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார். ஒன்றிய செயலாளர் காகம் மணி, பேரூராட்சி தலைவர் விஜயலட்சுமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடந்து உயர்ந்து வருவதால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ந்து வருகிறது.

    இதே போன்று பவானிவாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் குளிர்ச்சியான காற்றுடன் மழை பெய்ய தொடங்கி உள்ளதால். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

    இந்த மாத தொடக்கத்தில் 30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியதில் சிறிது சிறிதாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி 42 அடியை தொட்டது. மேலும் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 42.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 550 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பாசனத்துக்காக ஆற்றுக்கு 150 கன அடி நீரும், வாய்காலுக்கு 5 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

    பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடந்து உயர்ந்து வருவதால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ×