என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்: ஓடும் ரெயிலிலிருந்து தவறி விழுந்தாரா?
    X

    ஈரோடு அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்: ஓடும் ரெயிலிலிருந்து தவறி விழுந்தாரா?

    ஈரோடு அருகே ரெயில் நிலைய தண்டவாளத்தில் இருந்த வாலிபர் பிணம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள தொட்டிபாளையம் ரெயில் நிலைய தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணம் இருந்தது. அவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. ரெயிலில் அடிபட்டு அவரது உடல் சிதறி கிடந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த வாலிபர் பச்சை கலர் பனியன் சட்டையும், சாக்லட் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இடது மார்பில் ஷீலா என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இதே போல் வலது கையில் ஜி என்ற பச்சையும் குத்தப்பட்டிருந்தது.

    ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×