என் மலர்
ஈரோடு
ஈரோடு, கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற பெண் மீது திடீரென மோதி விட்டு சாலையோரமாக மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் அந்த வாலிபருக்கு தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார்.
அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இறந்த வாலிபர் பெயர் ஜோதி குமார் (வயது39) என தெரிய வந்தது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் விசைத்தறிகளிலும், கைத்தறிகளிலும் பல்வேறு ஜவுளி ரகங்கள் உற்பத்தியாகிறது இவை இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
சென்னிமலை பகுதியில் உற்பத்தியாகும் விசைத்தறி ஜவுளிகளில் ‘டெனிம்’ என்ற ரக பெட்சீட் அதிக அளவில் இலங்கைக்கு ஏற்றுமதியாகிறது, சென்னிமலை பகுதியில் இருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள 600 பேல்கள் வரை பெட்சீட்கள் ஏற்றுமதியாகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கையில் நல்ல முறையில் வர்த்தகம் நடைபெற்றது ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மாதம் ரூ.60 லட்சம் மதிப்பிலான பெட்சீட்கள் ஏற்றுமதி செய்யபட்டது.
சென்னிமலை பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். தற்போது இலங்கையில் நல்ல முறையில் வியாபாரம் நடந்து வரும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பின்பு உள்நாட்டு உற்பத்தி தொடக்கம் இலங்கையில் இறக்குமதி போர்வை ரகங்களுக்கு கிலோவிற்கு ரூ. 20 வரை புதிய வரி என விதித்துள்ள காரணத்தால் இலங்கை வியாபாரத்தை பாதிக்குமென சென்னிமலை ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கை ஏற்றுமதியாளரும் சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் பொன். ஈஸ்வர் மூர்த்தி கூறியதாவது:-
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய ஆர்டர்களைவிட இலங்கை ஆர்டர் சென்னிமலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு புது தெம்பை கொடுத்தது, தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் என்ன நடக்குமோ என தெரியாமல் திகைத்தோம் இதனால் அதிக பயம் இருந்தது. திடீர் என இந்திய ஜவுளிகளை இலங்கை அரசு இறக்குமதி செய்ய தடைவிதித்தால் என்ன செய்வது என புரியாமல் இருந்தோம். இலங்கை ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியை குறைக்கவும் கூட முடிவு செய்தோம்.
இருந்தாலும் விற்பனை பெரிய அளவில் சரிவுகள் இல்லை, ஆனால் இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர். மேலும் இறக்குமதிக்கு குறிப்பாக போர்வை ரகங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 வரை வரி விதித்துள்ளனர். இதனால் இலங்கை ஏற்றுமதி ஆர்டர் குறைந்து வருகிறது. மேலும் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தகவல் சென்னிமலை ஜவுளி உற்பத்தியாளர்களை கவலையடைய செய்துள்ளது.
வக்கீல்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்திலும் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஒரு மாதத்துக்கு மேலாகியும் வக்கீல்கள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் முடங்கி கிடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) வக்கீல்கள் ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். இதில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வக்கீல்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், பவானி உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 250 வக்கீல்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தனி பஸ்களில் இன்று இரவு சென்னை புறப்பட்டு செல்கிறார்கள்.
கோபி:
சித்தோடு அருகே உள்ள வசுவப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரதுமகன் சங்கர் !வயது 23). இவர் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரும் இவரது நண்பர் ஜனார்த் தனம் என்பவரும் வேலை விஷயமாக கோபி அருகே உள்ள கொளப்பலூர் சென்றனர்.
பிறகு அவர்கள் அரசு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தனர். அவர்களின் பின்னால் ஒரு இளம் பெண் நின்று கொண்டு இருந்தார்.
இந்த பஸ் கொளப்பலூர்-கோபி அருகே வரும் போது அந்த பெண் சங்கரின் கைப்பையை நைசாக திறந்து அதில் இருந்த ரூ.300-ஐ திருடினார்.
இதன்பிறகு அவர் பஸ்சில் இருந்து தப்பி செல்ல முயன்றார். இதை கவனித்து விட்ட சங்கர் அவரது நண்பர் மற்றும் பயணிகள்சேர்ந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.
இதன்பிறகு அவர் கோபி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது அவர் அரச்சலூர் அருகே உள்ள நாச்சிவலசு கரடு என்ற இடத்தை சேர்ந்த சின்னக் கண்ணன் என்பவரின் மனைவி துர்க்கா (வயது29) என்பதுதெரிய வந்தது.
இதையொட்டி துர்க்காவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதை தொடர்ந்து பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் பவானிசாகர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தண்ணீர் வரத்தால் படிப் படியாக அணையின் நீர் மட்டமும் உயர்ந்தது. இந்த மாத தொடக்கத்தில் 35 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் படிபடியாக உயர்ந்து 50 அடியை தாண்டியது.
இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்டது. மேலும் நீலகிரி மலையில் உள்ள அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படுவதும் நிறுத்தப்பட்டது.
இதனால் அணைக்கு நீர் வரத்து கடந்த வாரமாக வெகுவாக குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 261 கன அடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது. ஆற்றுக்கு 150 கன அடியும், வாய்க்காலுக்கு 5 அடி கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் இன்று 59.35 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த வருட சாகுபடி இதனால் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் உள்ளனர்.
பொள்ளாச்சியில் உள்ள நல்லூர் ஜமீன்முத்தூர் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பிரேமலதா (வயது47).
இவர் தனது மகன் தருண் (20) மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு தனியார் பஸ்சில் பயணம் செய்தனர். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரேமலதா பஸ்சின் முன்புற படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்தார்.
பஸ் சிவகிரி அருகே உள்ள கருக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது ஒரு வளைவில் பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது பிரேமலதா தடுமாறி பஸ்சில் இருந்து உருண்டு கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளை சேர்ந்த முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகள் பெற்று வரும் பயனாளிகள் உதவித் தொகை பெற அருகில் உள்ள வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும்.
தங்கள் பகுதியில் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்கி அதன் புத்தகத்தின் நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் தொலைபேசி எண்ணுடன் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய சமூக பாதுகாப்பு தாசில்தார் அலுவலகங்களில் அலுவலக நேரங்களில் வரும் 31–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) க்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு:
கோபியை அடுத்த சிறுவலூர், கோல்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் விஸ்வேஸ்வரன்(வயது37). சரக்கு ஆட்டோ டிரைவராக உள்ளார்.
சம்பவத்தன்று இவர் கோபி கரட்டூருக்கு வந்து விட்டு சிறுவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த மாரப்பன், ஆனந்தன், மூர்த்தி, சண்முகசுந்தரம் ஆகியோரும் இந்த ஆட்டோவில் பயணம் செய்தனர்.
கோபி–குன்னத்தூர் மெயின் ரோட்டில் சென்ற போது எதிரே மாருதி வேன் வந்து கொண்டிருந்தது. வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலைதடுமாறிய வேன் கவிழ்ந்து சரக்கு ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த விஸ்வேஸ்வரன், மாரப்பன்,ஆனந்தன், மூர்த்தி, சண்முகசுந்தரம், மாருதி வேனில் பயணம் செய்த சுரேஷ், கிருஷ்ணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆனந்தன், மூர்த்தி, சண்முகசுந்தரம் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் (வயது39).
சம்பவத்தன்று ராஜனும், மரகதமும் சின்னியம் பாளையம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த பஸ் ஒன்று எதிர்பாராத வகையில் ராஜன், மரகதம் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ராஜனுக்கு இடுப்பில் பலத்த அடி விழுந்தது. மரகதத்திற்கு வயிறு கீழ் பகுதியில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மரகத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சித்தோடு பேரூராட்சி, நல்லாகவுண்டன்பாளையம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி தலைமையில் நடந்தது, இதில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
நிகழ்ச்சியில் 11 பேர்களுக்கு முதியோர் உதவித்தொகை, 2 பேர்களுக்கு வாரிசு சான்றிதழ், 5 பேர்களுக்கு புதிய ரேசன் கார்டுகள், 15 பேர்களுக்கு ரேசன் கார்டு புதுப்பித்தல் என மொத்தம் 33 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
முதலமைச்சர் ஆணைக்கிணங்க அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இம்முகாமில் பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் முதியோர் ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், நிலம் தொடர்பான பிரச்சனைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதிசான்றிதழ்கள் புதிய குடும்ப அட்டைகள், குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், கடை மாற்றம் செய்தல், பெயர் நீக்கம் உள்ளிட்டவை தொடர்பான 80-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடிவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதில் சித்தோடு பேரூராட்சி தலைவர் வரதராஜன், தாசில்தார் வன்னியசெல்வம் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு 110–22 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மற்றும் 22 கி.வோ மின்பாதைகளில் பராமரிப்பு மற்றும் விஸ்தரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கீழ் கண்ட பகுதிகளில் மின்சாரம இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன் சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், சம்பத் நகர், பெரிய வலசு, கருங்கல்பாளையம், நாராயண வலசு, சாஸ்திரி நகர், குமரன், நகர், ஜீவா நகர்,
மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோக புரம், வைராப்பாளையம், மூலப் பட்டறை, பெரியார் நகர், சத்தி ரோடு, கே.என்.கே. ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் அ.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகிறது. இந்த யானைகள் அடிக்கடி மைசூர் ரோட்டை கடந்து செல்லும் சில சமயம் ரோட்டோரமே யானைகள் திரியும்.
இந்த நிலையில் ஆசனூர் பகுதியில் யானைகளால் உயிர் பலியாகும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
ஆசனூர் அடுத்த அரேப் பாளையத்தை சேர்ந்த பழங்குடி பெண் ஜடைச்சி (55) என்பவர் நேற்று முன்தினம் தனது ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் விறகு பொருக்கிய போது ஒற்றை யானையால் தாக்கி பலியானார்.
அவருடன் சென்ற மற்ற 4 பெண்கள் ஆளுக்கொரு திசையில் ஓடி தப்பினார். பெண்ணை தாக்கி கொன்ற யானை அதே இடத்தில் நின்றதால் உடலை மீட்க தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு யானையை விரட்டி வனத் துறையினரும், பொதுமக்களும் ஜடைச்சி உடலை மீட்டனர்.
அதே பகுதியில் இதே போல் கடந்த சில மாதத்துக்கு முன் யானைகளால் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது ஜடைச்சியை சேர்த்து 3 பேர் பலியாகி உள்ளார்.
இப்படி யானைகளால் உயிர் பலியாகும் சம்பவம் இனியும் தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வன ஆர்வலர்களும் கேட்டு கொண்டுள்ளனர்.
வனப்பகுதிக்குள் விறகு பொருக்க செல்பவர்கள் அடர்ந்த வனத்துக்குள் செல்வதை தடுக்க வேண்டும். இதேபோல் ஆடு-மாடு மேய்ப்பவர்களும் வனப்பகுதி உள்ளே போக வேண்டாம். மெயின் ரோட்டோரமோ அல்லது கிராமப்பகுதி எல்லை யோரமோ மேய்க்க வேண்டும் என வன ஊழியர்கள் கேட்டு கொண்டுள்ளனர்






