என் மலர்
செய்திகள்

கணவன் கண் முன் இளம் பெண் விபத்தில் பலி: பஸ் மோதியது
ஈரோடு:
மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் (வயது39).
சம்பவத்தன்று ராஜனும், மரகதமும் சின்னியம் பாளையம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த பஸ் ஒன்று எதிர்பாராத வகையில் ராஜன், மரகதம் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ராஜனுக்கு இடுப்பில் பலத்த அடி விழுந்தது. மரகதத்திற்கு வயிறு கீழ் பகுதியில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மரகத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






