என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகிரி அருகே ஓடும் பஸ்சிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்
    X

    சிவகிரி அருகே ஓடும் பஸ்சிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

    சிவகிரி அருகே ஓடும் பஸ்சிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    சிவகிரி:

    பொள்ளாச்சியில் உள்ள நல்லூர் ஜமீன்முத்தூர் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பிரேமலதா (வயது47).

    இவர் தனது மகன் தருண் (20) மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு தனியார் பஸ்சில் பயணம் செய்தனர். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரேமலதா பஸ்சின் முன்புற படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்தார்.

    பஸ் சிவகிரி அருகே உள்ள கருக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது ஒரு வளைவில் பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது பிரேமலதா தடுமாறி பஸ்சில் இருந்து உருண்டு கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×