என் மலர்
செய்திகள்

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் குறைந்தது
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு:
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதை தொடர்ந்து பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் பவானிசாகர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தண்ணீர் வரத்தால் படிப் படியாக அணையின் நீர் மட்டமும் உயர்ந்தது. இந்த மாத தொடக்கத்தில் 35 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் படிபடியாக உயர்ந்து 50 அடியை தாண்டியது.
இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்டது. மேலும் நீலகிரி மலையில் உள்ள அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படுவதும் நிறுத்தப்பட்டது.
இதனால் அணைக்கு நீர் வரத்து கடந்த வாரமாக வெகுவாக குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 261 கன அடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது. ஆற்றுக்கு 150 கன அடியும், வாய்க்காலுக்கு 5 அடி கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் இன்று 59.35 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த வருட சாகுபடி இதனால் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் உள்ளனர்.

Next Story