என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபி அருகே திருமணம் ஆன 4 மாதத்தில் புதுப்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் அளித்துள்ளார்.

    கோபி:

    கோபி அருகே உள்ள பா. நஞ்ச கவுண்டன் பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி சங்கீதா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் தான் ஆகிறது.

    சம்பவத்தன்று செந்தில்குமார் வேலைக்கு சென்று விட்டார். அவரது பெற்றோரும் வெளியூர் சென்று விட்டனர். இதனால் சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இதன்பிறகு அவரை திடீர் என்று காணவில்லை. வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி செந்தில் குமார் வீட்டில் தனது மனைவி இல்லாததை கண்டு திடுக்கிட்டார்.

    இதனால் அவரை அக்கம் பக்கத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடினர். எங்கு தேடியும் அவரைபற்றி எந்த தகவலும் கிடைக் கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பதும் தெரிய வில்லை.

    எனவே இது பற்றி செந்தில் குமார் கோபி போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து காணமால் போன சங்கீதாவை தேடி வருகிறார்கள்.

    குறிப்பிட்ட காலத்துக்குள் பொங்கல் இலவச வேட்டி- சேலை தயாரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கைத்தறி துறை அமைச்சர் மணியன் கூறினார்.
    ஈரோடு:

    தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கி வருகிறது.

    இதே போல் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை வழங்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அரசு கைத்தறிதுறை முதன்மை செயலாளர் அர்மந்தர்சிங், இயக்குனர் முனியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கைத்தறி துறை அமைச்சர் மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி- சேலை வழங்கி வருகிறது. அது தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகைக்குள் தரமான வேட்டி- சேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வேட்டி- சேலைகள் தரமானதாக இருப்பதோடு அளவும் குறையாமலும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் மணியன் கூறினார்.

    ஆய்வு கூட்டத்தில் செல்வ குமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரணி, ஈரோடு மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குனர் பிச்சமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    கோபி அருகே உள்ள பாரியூர் வெள்ளாள பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் ஆனந்தி (வயது 18).

    இவர் அருகில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆனந்திக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லையாம்.

    வயிற்று வலியால் அவதிபட்டு வந்த ஆனந்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இந்த நிலையில் அருகே உள்ள குலவிளக்கு பெருமாள் கோவில் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கோபி தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆனந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காவிரி மேலாண்மை அமைக்க கோரி ஈரோட்டில் இன்று 2-வது நாளாக ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    காவிரி மேலாண்மை அமைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 2 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடக்கும் என அனைத்து விவசாய சங்கத்தினரும், அனைத்து அரசியல் கட்சியினரும் அறிவித்திருந்தனர்.

    அதன் படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஈரோடு காளை மாடு சிலை அருகே திரண்டனர்.

    இதில் தி.மு.க. சார்பில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி தலைமையிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் திருநாவுக்கரசு, மார்க்.கம்யூ சார்பில் முத்துசாமி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ண கவுண்டர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசி மணி ஆகியோர் தலைமையில் தனித்தனியாக ரெயிலை மறிக்க ரெயில் நிலையத்துக்கு கோ‌ஷமிட்டப்படி சென்றனர்.

    ரெயில் நிலைய வாயிலை அடைந்ததும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி உள்பட நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.
    கவுந்தப்பாடியில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அண்ணா மார் கோவில் மேடு, அய்யன் வலசு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60). இவரது மனைவி சுசிலா. இவர்களுடைய மகன் மெய்நாதன்(26). என்ஜினீ யரிங் பட்டதாரி.

    மெய்நாதன் கடந்த 3 வருடமாக பல இடங்களில் வேலை தேடியுள்ளார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்தாராம்.

    மேலும் மெய்நாதன் படிப்புக்காக அவரது தந்தை ஒரு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தார். இதனால் அவரது குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்துள்ளது.

    சம்பவத்தன்று மெய்நாதன் வேலை கிடைக்க வில்லை என்றும் பெற்றோரை கடன்காரர்களாக ஆக்கி விட்டேன் என்றும் அழுது வருத்தப்பட்டார். அவரை அவரது தாய் சுசிலா சமாதானப்படுத்தினார்.பின்னர் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்புறம் உள்ள கோவில் அருகில் உள்ள வேப்பமரத்தில் மெய்நாதன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் சுசிலா தனது மகனை எழுப்ப கதவை தட்டினார். ஆனால் பதில் வராததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். மெய்நாதனை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த சுசிலா தனது உறவினர்களுடன் மெய்நாதனை தேடினார். அப்போது அவரது வீட்டின் பின்னால் கோவில் அருகில் உள்ள வேப்பமரத்தில் மெய்நாதன் தூக்கு மாட்டி பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். கதறி அழுதனர். இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் மெய் நாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பவானிசாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக நீர் குறைந்த அளவே வந்து கொண்டிருந்தது.

    ஏற்கனவே தென்மேற்கு மழை பொய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த துயரத்தில் இருந்தனர். இதனால் அணையின் நீர் மட்டம் தொடர்ந் 52 அடியிலேயே இருந்தது.

    மேலும் ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து ஆற்றுக்கு மட்டும் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள நீர் மின் அணையில் இருந்து 2 டி.எம்.சி.தண்ணீரை பவானிசாகர் அணைக்கு திறந்து விடும்படி அரசு உத்தரவுவிட்டுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடி 1251 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிக்கிறது. பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ் பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மொடக்குறிச்சி-எழுமாத்தூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு கோட்டத்துக்குட்பட்ட எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம் பாளையம், வெள்ளபெத் தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக் காட்டுவலசு, வெப்பிலி மற்றும் 88 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் கே.சின்னுசாமி தெரிவித்து உள்ளார்.

    பவானியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    பவானி அந்தியூர் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி கவுரி (வயது46). கணவர் இறந்ததையொட்டி சீனிவாசபுரம் பழைய பஞ்சாயத்து ரோட்டை சேர்ந்த சலிம்பாட்சா என்பவருடன் கடந்த 10 மாதமாக கவுரி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கவுரிக்கும்-சலிப்பாட்சாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் பொது இடத்தில் காரசாரமாக மோதி கொண்டனர். அப்போது சலீம் பாட்சா, கவுரிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதையொட்டி கவுரி பவானி மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குபதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த சலிம்பாட்சாவை கைது செய்தார்.

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஈரோட்டில் ரெயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் மத்திய மந்திரி உள்பட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி இன்றும் நாளையும் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு ரெயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

    இதன் படி அந்தந்த கட்சி தலைவர்கள் தலைமையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு கட்சி தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதே போல் ஈரோட்டிலும் ரெயில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    ஈரோட்டில் அனைத்து கட்சியினரின் ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின் படி காலை 6 மணிக்கெல்லாம் ஈரோடு ரெயில் நிலையம் முன் நூற்றுக்கணக்கான போலீசார் குவிந்தனர்.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேரில் வந்து பாதுகாப்பு பணி குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மறியல் நடத்த அனைத்து கட்சியினரும் ஈரோடு காளை மாட்டு சிலை அருகே குவிந்தனர்.

    தி.மு.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி தலைமையிலும் திரண்டனர்.

    இதே போல் த.மா.கா. சார்பில் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையிலும், மார்க். கம்யூ சார்பில் மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையிலும், இந்திய கம்யூ சார்பில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையிலும் அந்தந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்தனர்.

    பிறகு இவர்கள் ரெயிலை மறிக்க ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ‘‘அமைத்திடு, அமைத்திடு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடு’’ ‘‘வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே விவசாயிகளை வஞ்சிக்காதே’’ ‘‘கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம், மத்திய அரசை கண்டிக்கிறோம்’’ போன்ற கோ‌ஷங்கள் எழுப்பியப்படி சென்றனர்.

    ரெயில் நிலைய நுழைவு வாயிலை அடைந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். மீறி உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றினர்.

    முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.பி. கணேச மூர்த்தி உள்பட ஆயிரகணக்கான பேரை போலீசார் கைது செய்தனர்.
    தமிழக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி பாரதீய ஜனதா தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    பவானி:

    பவானி அடுத்த லட்சுமி நகரில் பா.ஜனதாவின் மாநில விவசாய அணி செயற்குழு கூட்டம் நடந்தது. அதன் தலைவர் பொன் விஜயராகவன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி பொது செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    முல்லை பெரியாருக்காக கேரளாவிடமும், பாலாறுக்காக ஆந்திராவிடமும், காவிரிக்காக கர்நாடகாவிடமும் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டு இருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் இருந்த போது முல்லை பெரியாறு, பாண்டியாறு திட்டம், தாமிரபரணி ஆற்று படுக்கை திட்டம் ஆகியவற்றை கிடப்பில் போட்டு விட்டது. 2007 முதல் 2013 வரை கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காவிரி பிரச்சினையை தீர்க்க அத்தனை அம்சங்களும் கையில் இருந்தும், அதை தவறவிட்டு விட்டு இப்போது மத்திய அரசை குறை சொல்கிறது. இவர்கள் இப்போது உண்ணாவிரதம் வேறு இருக்கிறார்களாம் வேடிக்கையாக இருக்கிறது.

    ஆனால் தமிழக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி பாரதீய ஜனதா தான். உச்சநீதிமன்ற அமர்வு வரும் போது தமிழகத்துக்கு சரியான நியாயம் கிடைக்கும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    கூட்டத்தில் காவிரி பிரச்சினையில் எதையும் மதிக்காத கர்நாடக அரசை கண்டிப்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அகில பாரத விவசாய அணி தலைவர் விஜய்பால் சிங்தோமர், சத்புகுமார், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கதிர்வேல் நன்றி கூறினார்.

    இதைதொடர்ந்து திருப்பூரில் நடக்கும் பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழிசை சவுந்திரராஜன் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

    ஈரோட்டில் பூட்டிய வீட்டில் இடியாப்ப வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பெரிய கீழவயல் பகுதியை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மகன் ஆண்டிக்காளை(வயது26). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    ஆண்டிக்காளை தற்போது ஈரோடு, வீரப்பன்சத்திரம், கலைமகள் வீதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து இடியாப்பம் செய்து வீதி வீதியாக சென்று விற்று வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார். மாலை வரை ஆண்டிக்காளை வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஆண்டிக்காளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆண்டிக்காளை உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஆண்டிக்காளை தற்கொலைக்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை. இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோபி-அந்தியூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 35 புதுப்பட சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    கோபி:

    கோபி சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். பெரியார் திடல் அருகே சந்தேகப் படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கோபி வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த குமார்(33) என்றும் அவர் புதுப்பட சி.டி.க்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து தில்லுக்கு துட்டு, நம்பியார் உள்பட 11 புதுப்பட சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதே போன்று அந்தியூர் சத்தி மெயின் ரோடு, மார்க்கெட் அருகில் அந்தியூர், சின்னதம்பி பாளையம் பகுதியை சேர்ந்த பொம்மநாயக்கர்(55) என்பவர் புதுப்பட சி.டி.க்களை விற்றதாக அந்தியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் இருந்து குற்றம் தண்டனை, உச்சத்தில்சிவா உள்பட 13 புதுப்பட சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பொம்மநாயக்கரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பங்களாபுதூர், டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியில் அந்தியூர்,தவிட்டு பாளையம், அம்பேத்கார் வீதியை சேர்ந்த சக்திவேல் (55) புதுப்பட சி.டி.க்களை விற்றதாக பங்களாபுத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 11 சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×