என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை
- ராமச்சந்திரன் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் தேள் கரடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (33). இவரது மனைவி மேகலா. ராமச்சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக்கொண்டு ராமச்சந்திரனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் குடிபோதையில் அடிக்கடி ராமச்சந்திரன் நான் சாக போகிறேன் என்று கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் நான் சாக போகிறேன் என்று சொல்லிக்கொண்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்று உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ராமச்சந்திரன் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ராமச்சந்திரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






