என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சர்வதேச புலிகள் தின விழிப்புணர்வு பேரணி
  X

  சர்வதேச புலிகள் தின விழிப்புணர்வு பேரணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
  • இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  சத்தியமங்கலம்:

  சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  இதில் கலந்து கொண்ட மாணவர்கள் புலிகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், முகத்தில் புலி மாஸ்க் அணிந்தும் பேரணியாக சென்றனர்.

  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வடக்குப்பேட்டை, ஆற்றுப்பாலம், பஸ்நிலையம் வாய்க்கால் மேடு வழியாக மாவட்ட வன அலுவலகத்தை அடைந்தது.

  இந்த பேரணியில் சத்தியமங்கலம் வன அலுவலர் தீபக்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×