search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள அங்கன்வாடி அலுவலகம் முன் வட்டார நிர்வாகி கற்பகம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் வரலட்சுமி வரவேற்றார்.

    இதில் 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

    அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் பார்ப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றார்கள்.

    அதனை சரி செய்திட வேண்டும். உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    ஓய்வு பெற்றவர்களுக்கு ஜி.பி.எப். பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தை சார்ந்தபணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க பவானி வட்டார கிளை சார்பில் பவானியில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில செயற்குழு உறுப்பினர் பூங்கொடி தலைமை வகித்தார். பவானி வட்டார தலைவர் விஜயால், துணைத் தலைவர் லீலா, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    அதே போல் தற்போது வட்டார அளவில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்ந்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×