என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை-எலக்ட்ரிசீயன் கைது
    X

    கோவை அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை-எலக்ட்ரிசீயன் கைது

    • மாணவி மறுக்கவே எலக்ட்ரிசீயன் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து சென்றார்.
    • மாணவியின் தாய் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமாரபுரத்த சேர்ந்த 15 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு பள்ளிக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் அவரை அடிக்கடி பின் தொடர்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த 23 வயது எலக்ட்ரிசீயன் காதலிக்கு மாறு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். ஆனால் மாணவி காதலிக்க மறுத்து விட்டார்.

    சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அவர் பள்ளி அருகே சென்ற போது மீண்டும் அவரை பின் தொடர்ந்து வந்த எலக்ட்ரிசீயன் மீண்டும் பின் தொடர்ந்து வந்து காதலிக்குமாறு தகராறு சென்றார். மாணவி மறுக்கவே எலக்ட்ரிசீயன் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து சென்றார்.

    இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த எலக்ட்ரிசீயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×