search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை கடும் உயர்வு
    X

    பரமத்தி வேலூர் பகுதியில் பூக்கள் விற்பனை நடைபெற்ற போது எடுத்த படம்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை கடும் உயர்வு

    • பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு.
    • பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், நாகப்பாளையம், செல்லப்பம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, அரளி, செண்டுமல்லி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகே செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் குண்டுமல்லிகை ரூ.400- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- க்கும், முல்லை ரூ.400- க்கும், செவ்வந்தி ரூ.150- க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லிகை கிலோ ரூ.1500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.300- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லை கிலோ ரூ.1500-க்கும், பச்சை முல்லை ரூ.1500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு அடைந்து உள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×