என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் அருகே  ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் சாவு
    X

    ஆட்டோ கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    ராதாபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகேந்திரன் குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார்.
    • ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிச்சை பிள்ளை மகன் நாகேந்திரன் (வயது 48).

    பாலத்தில் மோதி கவிழ்ந்தது

    ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 18-ந் தேதி குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மதியம் ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

    ராதாபுரம் அருகே உள்ள பெத்தரங்கபுரம் ஊருக்கு கிழக்கே உள்ள பாலத்தில் சென்றபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நாகேந்திரன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரது குடும்பத்தினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனிடையே அந்த வழியாக சென்றவர்கள் விபத்து நடந்ததை பார்த்து ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×