என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் பூக்குழி இறங்கியபோது எடுத்தபடம்.
சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா
- சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
- இதில் 200 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-ம் தெருவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2-ந் தேதி சக்தி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 5-ந் தேதி ஐந்தாம் கரகம் நிகழ்ச்சியும், 8-ந் தேதி அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும் நடந்தது.
9-ந் தேதி துரோபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று நடந்தது. விழாவில் காலை சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும்,
மாலை சுவாமி அம்பாள் நாதஸ்வர வாத்தியங்களுடன் கரவக்குமார் காவக்குடம் சுமந்தபடி, மஞ்சளாடை உடுத்தி பூ இறங்கும் பக்தர்கள் பக்தர்களுடன் துரோபதி அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து அக்னி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 200 பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர். இதில் ஏராளமாேனார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று (11-ந் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவும், 12-ந் தேதி ஊஞ்சல் நிகழ்ச்சியும், 14-ந் தேதி பால்குடம் மற்றும் அம்மன் படைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.






