என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சங்கரன்கோவில் கிளை சிறையில் அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் குறைகேட்பு
  X

  சங்கரன்கோவில் கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்ட தி.மு.க.வினர்.


  சங்கரன்கோவில் கிளை சிறையில் அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் குறைகேட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கரன்கோவில் கிளை சிறையில் தேவைகள் குறித்து தி.மு.க. சட்டத்துறை துணை செயலாளர் கண்ணதாசன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
  • அடிப்படை வசதிகளை செய்து தர சட்டத்துறை அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் கிளை சிறையில் தேவைகள் குறித்து தி.மு.க. சட்டத்துறை துணை செயலாளர் கண்ணதாசன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

  தொடர்ந்து சிறை கட்டிடம் பழமையாக இருப்பதால் கட்டிடத்தை மாற்றி கூடுதல் அறைகள் கட்டி தரவும், சமையல் கூடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர சட்டத்துறை அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர். அப்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மூத்த உறுப்பினர் சந்திரன், முன்னாள் சேர்மன் பாலசுப்ரமணியன் வக்கீல் ஜெயக்குமார், ஆசிரியர் ஐசக், மாரியப்பன், பிரகாஷ், ஜெயக்குமார் அப்பாஸ் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

  Next Story
  ×