search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைவரும் சமம் என்று சமத்துவத்தை போதித்த கட்சி தி.மு.க. - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    பெரியசாமிபுரம் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.

    அனைவரும் சமம் என்று சமத்துவத்தை போதித்த கட்சி தி.மு.க. - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு

    • தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் இ.வேலாயுதபுரம், மற்றும் பெரியசாமிபுரம் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் இ.வேலாயுதபுரம், மற்றும் பெரியசாமிபுரம் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட கவுன்சிலர் நிக்கல் நவமணி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், தி.மு.க. பேச்சாளர் சரத் பாலா, மேல்மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்தையாசாமி, வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    பின்னர் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அனைவருக்கும் சமத்துவத்தை போதித்த கட்சி தி.மு.க. தான் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

    மத்திய அரசு மதப்பிரி வினையை ஏற்படுத்தி அரசியல் செய்கிறது ஆனால் மனிதனாக பிறந்தவனெல்லாம் சமம். அனைவரும் கோவிலுக்கு செல்லலாம். அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு உன்னத மான திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். அதன் வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார்.

    தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதற்கேற்றுவாறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக இல்லம் தேடி கல்வித் திட்டம் பள்ளி சிறுவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். நம்ம ஸ்கூல் திட்டம், இதுபோன்ற பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

    கூடிய விரைவில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க திட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் அதை விரைவில் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×