search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர்கல்வி துறையில் புரட்சி செய்த அரசு தி.மு.க. அரசு- ராஜா எம்.எல்.ஏ. பேச்சு
    X

    சமத்துவ பொங்கல் விழாவில் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

    உயர்கல்வி துறையில் புரட்சி செய்த அரசு தி.மு.க. அரசு- ராஜா எம்.எல்.ஏ. பேச்சு

    • சமத்துவ பொங்கல் விழாவுக்கு கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் தலைமை தாங்கினார்.
    • விழாவில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசினர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வணிகவியல் துறை தலைவர் வேணுகோபால் வரவேற்றார்.விஜிலா ஜாஸ்மின் தொகுத்து வழங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    சமத்துவ பொங்கல் என்பது அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுகின்றது முன்பெல்லாம் சிறிய அளவில் நடந்து வந்த நிகழ்ச்சி தற்போது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

    உயர்கல்வி துறையில் மிகப்பெரிய புரட்சி செய்த வர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். 1989-ல் தமிழகத்தில் மாவட்ட அளவில் ஒரு கல்லூரி என இருந்த நிலையில் தற்போது 5,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உருவாக காரண மாக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

    மேலும் காமராஜர் வழியில் கல்விக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000-மும் ஊக்க தொகை வழங்கி மாணவிகளின் கல்வியை ஊக்குவித்து வருகின்றார்.

    தற்போது சங்கரன் கோவில் தொகுதியில் 30 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. மாணவ , மாணவிகளான நீங்கள் கல்வி விளையாட்டு மட்டுமல்லாமல் நமது தொகுதி முன்னேறவும் உங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் யூனியன் சேர்மன் அன்புமணி, மூத்த உறுப்பினர் சந்திரன், சார்பு அணி பத்மநாபன், பிரேம்குமார், இளைஞர் அணி சரவணன், ஆதிதிராவிடர் அணி யோசேப்பு, சூரியநாராயணமூர்த்தி, வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, வைரவேல், வெள்ளத்துரை, சிவா மற்றும் மாரிகுட்டி, ஜான், பாரதிராஜா, பில்லா கணேசன், வக்கீல் சதீஷ் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் துறை தலைவர் கலாகோபி நன்றி கூறினார்.

    Next Story
    ×