என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சங்கரன்கோவிலில் தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனை கூட்டம் - ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
  X

  கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.


  சங்கரன்கோவிலில் தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனை கூட்டம் - ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கரன்கோவில் தனியார் விடுதி அரங்கில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் தனியார் விடுதி அரங்கில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி ஆலோ சனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் மருதப்பன் முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது-

  வக்கீல் அணிக்கு கட்ச யினர் எளிதாக அணுகும் வகையில் மாவட்ட அலுவலகம் அமைக்க வேண்டும். கட்சியினர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி அவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு மாவட்ட கட்சி நிர்வாகம் என்றும் துணை இருக்கும். கட்சி சார்ந்த போராட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்படும்போது கட்சி உறுப்பினர்களுக்கு வக்கீல்கள் அவர்களை சட்டபடி விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும், மேலும் வறுமை நிலையில் இருக்கும் கட்சியினருக்கு இலவச சட்ட உதவி செய்ய வேண்டும். மேற்கொண்டு உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் எனவும், இளம் வக்கீல்களை கட்சியில் இணைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

  இதில் வக்கீல்கள் சண்முகையா, பிச்சையா, கண்ணன், அருணாச்சலம், அன்புச்செல்வன், தேவா என்ற தேவதாஸ், ஜெயக்குமார், பேட்டரிக்பாபு ராஜா, வெற்றி விஜயன், பெரியதுரை, சந்தன பாண்டி யன், சதீஷ் காளிராஜ், பிரகாஷ் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×