என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆயுதப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
  X

  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஆயுதப்படை போலீசாரை பாராட்டியபோது எடுத்த படம்.

  ஆயுதப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கஞ்சா சோதனை நடத்தி வருகின்றனர்.
  • ஆயுதப்படை போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை மற்றும் மதுபான பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டிருந்தார்.

  அதன்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். சுத்தமல்லி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, புகையிலை மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

  அப்போது அந்த சோதனைக்கு உதவியாக இருந்து பணியாற்றிய ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்கள் சரவணன், சக்தி கணேஷ், ராம பாண்டியன், முருகேசன் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார்.

  Next Story
  ×