என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுக்கூட்டம்
- கூட்டத்தில் புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பங்கேற்பு
- மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை,
கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார்பாடி தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன், கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.கந்தசாமி (சூலூர்), அமுல் கந்தசாமி (வால்பாறை), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), மாவட்ட ஊராட்சி செயலர் பாஸ்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் புதிதாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கோபால்சாமி, கந்தசாமி, சக்திவேல், ராஜன், அப்துல் காதர், உமாமகஷே்வரி, செல்வராஜ், சிவா, கபிலன், ஜம்ருத்பேகம் முகமதுயூ னூஸ், கனகராஜ், ஸ்ரீதரன், கிருஷ்ணகுமாரி, மோகனப்ரியா, மனோகரன், பழனிசாமி என்ற சிரவை சிவா, ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட அளவில் வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏதுவாக மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






