என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்படுவது குறித்து என்று ஆலோசிக்கப்பட்டது.

    தருமபுரியில் உள்ள அம்பேத்கார் அறக்கட்டளை கட்டிடத்தில் தருமபுரி மைய மாவட்ட செயலாளர் த.கு.பாண்டியன் தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    தருமபுரி மைய மாவட்ட ஆலோசனை கூட்டத்திற்கு மேலிட தேர்தல் பொருப்பாளர்கள் தகடூர் மா.தமிழ்செல்வன் நற்குமரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வருகிற 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி னார். பின்னர் கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்படுவது குறித்து என்று ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் தமிழன்வர், மண்டல துணை செயலாளர் மின்னல் சக்தி, மாவட்ட பொருளாளர் மன்னன், மாநில துணை செயலாளர்கள் ராமன், கோட்ட கலைவாணன், சிவஞானம், கப்பல் செந்தில், கிள்ளிவளவன், ஏ.மாது, தனம், மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்தமிழன், ஒன்றிய செயலாளர்கள் ஆட்டோ கிருஷ்ணன், குமரன், பொன்சுரேஷ், சங்கர், சந்தானமூர்த்தி, மற்றும் நகர பொருப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • பாப்பிரெட்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
    • தொலைபேசிக்கு எந்த விதமான குறுஞ்செ ய்திகளும் வருவ தில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன.

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உதவித்தொகையை பெற ஏராளமான குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்க ளின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்த அரசு அதில் 1.6 கோடி நபர்களுக்கு தற்போது தொகையை ஒவ்வொரு கட்டமாக வழங்கி வருகிறது.

    தொகைக்கு விண்ணப்பித்த பெரும்பா லான குடும்பத் தலைவி களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் கிடைக்கப்பெற வில்லை எனவும், விண்ணப்பத்தின் நிலை குறித்து தொலைபேசிக்கு எந்த விதமான குறுஞ்செ ய்திகளும் வருவ தில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் தகுதியுடைய நபர்கள் விடுபட்டிருந்தால், இ-சேவை மூலமாக (அ) வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு சென்று விண்ணப்பத்தின் நிலையை அறிந்து மேல் முறையீடு செய்து பயன் பெறலாம். என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்நி லையில் விண்ணப்பத்தின் நிலையை அறியவும் , விண்ணப்ப த்திற்கு மேல்முறையீடு செய்யவும், தகுதி இருக்கும் தங்களுக்கு பணமும் வரவில்லை , அதற்கான குறுஞ்செய்திகளும் வரவில்லை என கூறி இன்று பாப்பி ரெட்டிப் பட்டி வட்டாட்சியர் அலு வலகத்தில், காலை முதலே குடும்பத் தலைவிகளின் கூட்டம் அலைமோதியது.

    இதனை அறிந்த அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொது மக்களிடத்தில் அவர்களின் குறைகளை கேட்டறிந்து தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு உரிமை த்தொகை கிடைக்கும் என கூறினார். மேலும் தகுதியான விண்ணப்பங்களை கவனத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யப்பட வேண்டிய விண்ண ப்பங்களை தகுதியான ஆவணங்களுடன் இணைத்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த திடீர் ஆய்வு காரணமாக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

    • தருமபுரி உழவர் சந்தையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி காய்கறிகள் ரூ.18 லட்சத்துக்கு விற்பனை ஆனாது.
    • வழக்கத்தைவிட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உழவுத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் காய்கறிகளை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு காய்கறி வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நுகர்வோர் இடத்தில் நேரடியாக அதிக வருவாயீட்டும் வகையில் தருமபுரி மாவட்ட வேளாண் துறை மூலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி, பேரூராட்சிகளில் உழவர் சந்தை விற்பனை மையத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனைத்து உழவர் சந்தை களுக்கும் உழவர்களால் நேரடி விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வகை காய்கறிகளையும் நேரடியாக சென்று வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இன்று தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் இந்துக்கள் விரதம் இருந்து தங்களது வீடுகளில் திருப்பதி வெங்கடாஜ லபதிக்கு காணிக்கையாக உண்டியல் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

    இந்த பூஜையை புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை முழுவதும் விசேஷமாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி தருமபுரி உழவர் சந்தையில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

    மேலும் இன்று சந்தையில் தக்காளி ரூ.10 , கத்தரிக்காய் ரூ.20 , வெண்டைக்காய் ரூ.6, முள்ளங்கி ரூ.20, முருங்கைக்காய் ரூ.45, தேங்காய் ரூ.30 ,சின்ன வெங்காயம் ரூ.38, கேரட் ரூ.40 என அனைத்து காய்கறிகளும் மிகக் குறைந்த விலையில் விற்பனை ஆனதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

    இன்று உழவர் சந்தைக்கு 30 ஆயிரத்து 600 கிலோ காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் ரூ.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை வாங்கி சென்றனர். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்

    • தரும்புரி மாவட்டத்தில் சாமந்தி பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • செண்டுமல்லி ரூ.10, சாமந்தி ரூ.20 என விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம், தொப்பூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.

    இப்பகுதிகளில் பரவலாக விவசாயிகள் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழிகொண்டை, அரளி உள்ளிட்ட பூ வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூக்கள் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி பூக்கள் மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால் பூக்களை வாங்க ஆளில்லாமல், கேட்பாரற்று விலை குறைந்து விற்பனையானது.

    தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில், இன்று சனிக்கிழமை பொதுமக்கள் விரதம் இருப்பதால், பூக்களின் தேவை அதிகரிக்கும், பூக்களின் விலை உயரும் என விவசா யிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புரட்டாசி முதல் சனி கிழமை நாளான இன்றும் பூக்களின் விலை உயராமல், குறைந்த விலையியேயே விற்ப னையானது.

    இன்றைய பூக்கள் சந்தையில் குண்டு மல்லி கிலோ ரூ.400, கனகாம்பரம் கிலோ ரூ.400, சன்ன மல்லி கிலோ ரூ.280, அரளி கிலோ ரூ.60, பட்டன் ரோஸ் கிலோ ரூ.60, தாமரை ஒரு மொட்டு ரூ.20, சம்பங்கி ரூ.60, செண்டுமல்லி ரூ.10, சாமந்தி ரூ.20 , பன்னீர் ரோஸ் ரூ.40, வெள்ளை சாமந்தி ரூ.40 என விற்பனையானது.

    கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைந்து விற்பனையான நிலையில் இன்றும் அதே நிலை நீடித்ததால், விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அடுத்த வாரம் 2- வது சனிக்கிழமை என்பதால், பூக்களின் விலை சற்று உயர வாய்ப்புள்ளதாக வியா பாரியாகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிப்சம் விநியோகம் செய்யப்படும் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    • நிலத்தின் சிட்டா மற்றும் ரேஷன்கார்டு நகலை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது' என, பென்னாகரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாரத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில், ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது.

    ஒரு நபருக்கு அதிக பட்சமாக, 8 மூட்டை அதாவது, 400 கிலோ ஜிப்சம் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மானிய விலையில் பெற, நிலத்தின் சிட்டா மற்றும் ரேஷன்கார்டு நகலை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

    நிலக்கடலையில், திரட்சியான மகசூல் பெற அடி உரமாக, 200 கிலோ ஜிப்சமும், 45-வது நாளில், 200 கிலோ ஜிப்சமும், 2.50 ஏக்கர் (ஒரு ஹெக்டேர்) பரப்பிற்கு இட வேண்டும். ஜிப்சம் இடுவதால், எண்ணெய் வித்து கூடுவது டன், காய்கள் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

    விவசாயிகளுக்கு தேவை–யான ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தேவைப்படும் விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரும்புரி மாவட்டத்தில் கணக்கெடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தடைபெற்றது.
    • கலெக்டர் சாந்தி , கணக்கெ டுப்பாளர்க ளுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்தி றனாளி களுக்கான உரிமைகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான குழு கூட்டம் மற்றும் தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழு கூட்டம் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    உலக வங்கி நிதியு தவியுடன் மாற்றுத்தி றனாளிகளுக்கு சேவைகள் புரிவதற்கு, தமிழ்நாடு அரசு மூலம் உரிமைகள் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாற்றுத்தி றனாளி களுக்கான சேவைகள் முழுமையாக கிடைத்திடும் வகையில் ஒவ்வொரு உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில்  துணை சேவை மையங்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளுதல், சமூக தரசுகளை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் முன் மாதரி திட்டங்கள் செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்ப டவுள்ளது.

    இக்கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டு, கணக்கெ டுப்பாளர்களுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தமிழ்நாடு அரசின் மாற்றுத்திற னாளிகளுக்கான உரிமை கள் திட்டத்தின் மூலம் மாற்றுத்திற னாளிக ளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்ப டவுள்ளது எனவும், இப்பணி  மகளிர் திட்ட களப்பணியாளர்கள் மூலம்  மாவட்டம் முழுவதும் வருகின்ற 29 -ம் தேதி முதல் அடுத்த மாதம் 22-ம் தேதி வரை நகர்பு றத்தில் நடைபெற வுள்ளதா கவும் தெரிவித்தார்.

    மேலும், இக்க ணக்கெடுப்பில் ஒரு மாற்றுத்திறனாளியும் விடுபடாமல் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்கும் பொருட்டு, அனைத்துறை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு தொடர்பான தகவலை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும்,  அனைத்து வட்டாரங்களிலும் துணை சேவை மையங்கள் அமைப்பதற்கு ஏதுவாக துணை இயக்குநர் சுகாதார பணிகள் கட்டுபாட்டில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டடங்களில் காலியாக உள்ள கட்டடங்களை வழங்கு மாறும் அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் யசோதா, இணை இயக்குநர் சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராமதாஸ், தணித்துணை கலெக்டர் நசீர் இக்பால், துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி, மாநில திட்ட மேலாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்சி அலுவலர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் நலசங்கங்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

    • பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
    • கடவுளின் ஆசிர்வாததத்தால் கோமாதா பிறந்து இருப்பதாகவே கிராம மக்கள் நினைக்கிறார்கள்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்தர். விவசாயி. இவரது பண்ணையில் 2 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் வளர்க்கும் பசுமாட்டில் ஒன்று ஆண் கன்று ஒன்றை ஈன்றது.

    அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்தது. இந்த கன்று குட்டி இரண்டு வாய், இரண்டு மூக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது.

    இந்த தகவல் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தெரியவர காட்டு தீ போல் பரவியது.

    இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

    கடவுளின் ஆசிர்வாததத்தால் கோமாதா பிறந்து இருப்பதாகவே அந்த கிராம மக்கள் நினைக்கிறார்கள்.

    மேலும் இந்த பசுவின் உரிமையாளர் பசு மாட்டையும், ஈன்ற அதன் கன்று குட்டியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    • இரவு 11 மணியளில் வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை
    • பெற்றோர்கள்,உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் கோகிலா (29). இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி கிராமத்தில் உள்ள ஜீவா என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த இரவு 11 மணியளில் வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை பெற்றோர், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இது குறித்து அவருடைய தந்தை முனுசாமி பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கோகி–லாவை தேடி வருகின்றனர்.

    இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் கடந்த 8-ம் தேதி ஓசூருக்கு வேலைக்கு செல்வதாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. பெற்றோ ர்கள்,உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவருடைய மனைவி பன்னீர்செல்வி பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரமேசை தேடி வருகின்றனர்

    இதேபோல் நல்லம்பள்ளி அடுத்த மேட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (32 ). லாரி ஓட்டுனர். சம்பவத்தன்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து மனைவி ஸ்ரீதேவி கொடுத்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அரூர் அடுத்த மூக்கனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசு (71) . இவர் அச்சலவாடியில் உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை

    இவரது மகன், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் மூவேந்தன் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முதியவரை தேடி வருகின்றனர்.

    • 14 வயது பிரிவில் மாணவர்கள் வேதிஷ் மற்றும் நரோஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    • மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் உள்ள ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் காரிமங்கலத்தில் நடந்த சரக அளவிலான புல்வெளி டென்னிஸ் போட்டியில் 14 வயது பிரிவில் மாணவர்கள் வேதிஷ் மற்றும் நரோஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பாவனி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ், ஆகியோர் பாராட்டினர்.

    மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், திருப்பதி, தினேஷ், புவனேஸ்வரி ஆகியோரை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.  

    • 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
    • மாணவி தலையில் காயம் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சிவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இக்கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இதே பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடுமையாக திட்டி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை நேற்று பள்ளியில் இருக்கும் போது தடியால் அடித்ததின் காரணமாக தலையில் அடிப்பட்டு வீங்கி உள்ளது. இதனையடுத்து பள்ளி முடிந்த பிறகு மாணவி வீட்டுக்கு சென்று சோர்வாக இருந்துள்ளார்.

    மாணவியை பார்த்த தாய் ஏன் அமைதியாக இருக்கின்றாய் என கேட்டதற்கு மாணவி அழுது கொண்டே ஆசிரியர் தலை மீது அடித்துவிட்டார் என கூறியுள்ளார்.

    மாணவியின் தலை வீங்கி இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன்பிறகு இது குறித்து ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் தேவையான பணத்தை கொடுக்கிறேன் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரி களிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

    மேலும் அதில் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல வருடங்களாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும், என அதில் தெரிவித்துள்ளனர்.  

    • நீதிமன்ற தொடக்க விழாவிற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார்.
    • நீதிபதிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் முதல் அனைத்தும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளகத்திலே செயல்பட்டு வருகிறது.

    தற்போது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு சட்ட முன்னெடுப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதி மன்றத்தின் பரிந்துரையின் பேரில், தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளை விசா ரிப்பதற்காக தனி நீதிமன்றம் தொடங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த போக்சோ சிறப்பு நீதிமன்ற தொடக்க விழாவிற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார். முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி சிறப்பு நீதிமன்றத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.சையத் பர்கத்துல்லா போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    போக்சோ வழக்கு களுக்கான சிறப்பு நீதிமன்ற தொடக்க விழாவில் குடும்ப நல நீதிபதி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய சிறப்பு நீதிபதி, தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர், செய லாளர், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • போதிய தண்ணீர் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருந்து வந்தனர்.

    பென்னாகரம்,  

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூ ராட்சிக்குட்பட்ட போடூர் அருகே சருக்கல் பாறையில் குடியிருப்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 25-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு, சாலை குடிநீர் கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்கள் குடியிருப்பில் போதுமான குடிநீர் வசதி இல்லாததால் அன்றாட தேவைக்கான தண்ணீரை பெற மிகவும் சிரமப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் போதிய தண்ணீர் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் சிமெண்ட் சாலைகள் வசதி , சரிவர மின் விளக்குகள் வசதி, கழிப்பிட வசதிகள், பட்டா வழங்கியும் குடியிருப்பு இல்லாத நபர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், குடியிருப்புகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டு விலங்குகளிலிருந்து பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குழந்தைகளுடன் பென்னாகரம் பேரூராட்சி அலுவல கத்தினை காலி குடங்களுடன் முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல அலுவலர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கோபால் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாகவும், கோரிக்கைகள் குறித்து அதிகாரி யிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்து விட்டு மலைவாழ் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×