என் மலர்
உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்களை படத்தில் காணலாம்.
அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி அலுவலகத்தினை மலைவாழ் மக்கள் முற்றுகை
- 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
- போதிய தண்ணீர் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருந்து வந்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூ ராட்சிக்குட்பட்ட போடூர் அருகே சருக்கல் பாறையில் குடியிருப்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 25-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு, சாலை குடிநீர் கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்கள் குடியிருப்பில் போதுமான குடிநீர் வசதி இல்லாததால் அன்றாட தேவைக்கான தண்ணீரை பெற மிகவும் சிரமப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் போதிய தண்ணீர் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சிமெண்ட் சாலைகள் வசதி , சரிவர மின் விளக்குகள் வசதி, கழிப்பிட வசதிகள், பட்டா வழங்கியும் குடியிருப்பு இல்லாத நபர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், குடியிருப்புகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டு விலங்குகளிலிருந்து பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குழந்தைகளுடன் பென்னாகரம் பேரூராட்சி அலுவல கத்தினை காலி குடங்களுடன் முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல அலுவலர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கோபால் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாகவும், கோரிக்கைகள் குறித்து அதிகாரி யிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்து விட்டு மலைவாழ் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






