டென்னிஸ் போட்டியில் ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் சாதனை

14 வயது பிரிவில் மாணவர்கள் வேதிஷ் மற்றும் நரோஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை படத்தில் காணலாம்.
போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை படத்தில் காணலாம்.
Published on

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் உள்ள ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் காரிமங்கலத்தில் நடந்த சரக அளவிலான புல்வெளி டென்னிஸ் போட்டியில் 14 வயது பிரிவில் மாணவர்கள் வேதிஷ் மற்றும் நரோஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பாவனி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ், ஆகியோர் பாராட்டினர்.

மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், திருப்பதி, தினேஷ், புவனேஸ்வரி ஆகியோரை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.  

X

Maalai Malar
www.maalaimalar.com