என் மலர்
தர்மபுரி
- தருமபுரி காரிமங்கலத்தில் அமைசைசர் உதயநிதி ஸ்டாலி்ன் கலந்து கொள்ளும் கூட்ட மேடையை திமுக மாவட்ட செயலாளர்கள் ஆய்வு செய்தனர்
- 1000 பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீ ரர்கள் ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்திற்காக காரிமங்கலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10,000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் இந்த பணிகளில் நூற்றுக்க ணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான பழனி யப்பன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, ஆகியோர் நேற்று இரவு திடீர் ஆய்வு செய்தனர். இதில் கூட்ட மேடை மற்றும் இளைஞர் அணியினர் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இந்த ஆய்விள் போது முன்னாள் எம்.பி. சேகர், மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பேரூராட்சி தலைவர் மனோகரன், பேரூராட்சி துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வெங்கடேஸ்வரன், சிவகுரு, கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கோபால், அன்பழகன், சந்திரமோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்து காணப்பட்ட மகேஷ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
தருமபுரி,
தரு மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஜீட்டாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது 60). இவர் தருமபுரி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.இவருக்கு 6 மகள்கள், 1 மகன் உள்ளார். இவரது இரண்டாவது மகளான மகேஷ்வரியை 17 ஆண்டுகளுக்கு முன்பு கும்பார அள்ளி அருகே உள்ள குளளன் கொட்டாயை சேர்ந்த முருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து காணப்பட்ட மகேஷ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரக அளவிலான போட்டிகளில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் வளையபந்து, மேசைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
சரக அளவில் நடைபெற்ற வளையப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் U-14 இரட்டையர் பிரிவில் அஜய்ஜோதி மற்றும் துர்காபிரசாந்த் முதலிடமும், U-17 ஒற்றையர் பிரிவில் தண்டபாணி முதலிடமும், இரட்டையர் ஆண்கள் பிரிவில் தண்டபாணி மற்றும் ஜெயக்குமார் முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
இறகுப்பந்து போட்டியில் U-14 ஆண்கள் இரட்டையர் பிரிவில் சபரி மற்றும் ஹரிபிரகாஷ் முதலிடமும், U-17 ஆண்கள் இரட்டை யர் பிரிவில் கிஷோர் மற்று ம் ஸ்ரீநிதிஷ் இரண்டா மிடமும், U-19 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாணக்கி யன்முதலிடமும், இரட்டையர் பிரிவில் சாணக்கியன் மற்றும் மோகித் முதலிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். U-19 பெண்கள் ஒற்றையர் பிரிவில் தர்ஷினிஸ்ரீ முதலிட மும், இரட்டையர் பிரிவில் தர்ஷினிஸ்ரீ மற்றும் ஷிவானி முதலிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
மேசைப்பந்து போட்டியில் U- 14 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ராம்கிஷோர் முதலிடமும், இரட்டையர் பிரிவில் ராம்கிஷோர் மற்றும் கீர்த்திவாசன்முதலிடமும், U- 19 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கெவின் இரண்டாமிடமும், இரட்டையர் பிரிவில் கெவின் மற்றும் இஜாஸ் முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். U- 14 பெண்கள் ஒற்றையர் பிரிவில் மிஸ்பா முதலிடமும், இரட்டையர் பிரிவில் மிஸ்பா மற்றும் ஆயிஷா முதலிடமும், U- 17 பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித்ரா முதலிடமும், இரட்டையர் பிரிவில் சுமித்ரா மற்றும் அட்ஷயா முதலிட மும், U- 19 பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழ்மதி முதலிடமும், இரட்டையர் பிரிவில் தமிழ்மதி மற்றும் வர்ஷா முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்க ளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்த குமார் மற்றும் சங்கீதா ஆகியோரை பள்ளியின ்தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தரும்புரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய வரவுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அறிக்கை விடப்பட்டுள்ளது.
- பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது்
தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாக தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கழக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தருமபுரி மாவட்டம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு காரிமங்கலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தை தொடர்ந்து பகல் 12 மணிக்கு தருமபுரி நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு, புரோக்கர் ஆபீஸ் அருகில் 60 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை அவர் ஏற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் அவருக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மாலையில் பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள ஜோதி மஹாலில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்குகிறார்.
அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பெருந்தி ரளான இளைஞர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
- அரூர் அருகே மான்வேட்டைக்கு சென்ற 4பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- நாட்டுத் தூப்பாக்கி மற்றும் தோட்டக்கள் பறிமுதல்
தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள சிந்தல்பாடி நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சோதனையின்போது அந்த வாகனத்தில் இருந்த ஒருவர் தப்பியோ டியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தில் மற்றவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் கொளகம்பட்டி காப்புக் காட்டில் மான்களை வேட்டையாடுவதற்காக வந்ததாக சிக்கிய 4 பேரும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், நடூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீபன் மகன் பிரபு (27), ராஜேந்திரன் மகன் விஜய் என்கிற சேர்வராயன் (28), மணி மகன் சதீஸ் (31), குப்புசாமி மகன் சுப்பிரமணி (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து மினி சரக்கு வாகனம், உரிமம் பெறாத ஒரு நாட்டுத் துப்பாக்கி, 15 தோட்டாக்கள் மற்றும் மான்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் மின்சாதன பொருள்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வனச்சட்டத்தின் படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தருமபுரி மாவட்டத்தில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
- அரசு மருத்துவமனைகளில் 60 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்கவும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் மருத்துவமனையில் 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதனை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலு வலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
டெங்குவிற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்வதற்கு அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் 60 படுகைகள் கொண்ட வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் குறைந்த அளவிலான டெங்கு பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் உள்ள குடிநீர் தொட்டிகள் முழுவதும் குளோரினை க்ஷேசன் பணி மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த ப்பட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு களப்ப ணியாளர்கள், மூலம் மருந்து தெளித்தல், கொசுப் புகை மருந்து அடிக்கும் பணிகள் செயல்படுத்தவும், காய்ச்சல் உள்ள பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் அறிவுறுத்த பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உடைந்த பொருள்களை பயன்ப டுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக ்கொள்ளப்ப டுகிறார்கள்.
உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் மழைநீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவகூடும். எனவே பொதுமக்கள் தங்களது வீட்டில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழித்து சுற்றுபுறத்தை துாய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்த படுகிறார்கள்.
மேலும் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும். பிடித்த தண்ணீரை காற்று புகாவண்ணம் துணி களைக்கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும். டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற வீட்டில் உபயோ கப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றிட வேண்டும். சுகா தாரபணியா ளர்கள் வரும்பொழுது வீட்டின் உட்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகளை தீவிரப்ப டுத்தவும் பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்ப டுத்தவும் உள்ளாட்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் நடவ டிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்த பட்டுள்ளது. டெங்கு அறிகுறிகள் தென்படு பவர்கள் உடனடி யாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்து வமனைகளை அணுக வேண்டும். இதைத் தவிர்த்து எக்காரணம் கொண்டும் அருகில் உள்ள மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி தாமாக எந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் உடல் நலம் பாதிக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமேஷ் பாபு, உள்ளிருப்பு மருத்து அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.
- காரிமங்கலம் அருகே 2 கோவில்களில் 9 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- அருகருகே திருட்டு சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் அச்சம்
தருமபுரி
தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே உள்ள பூலாம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் பூஜைகள் முடிந்து வழக்கம்போல் கோவில் அர்ச்சகர் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை சென்று பார்த்த போது கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் கோவில் முன்பாக கூடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் அதே பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியலில் இருந்த 7 பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டு இருப்பதை கோவில் அர்ச்சகர் இன்று காலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களிடம் தகவல் தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
2 கோவில்களிலும் சேர்ந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை யடித்துச் சென்று ள்ளனர். இந்த இரு திருட்டு சம்பவங்கள் குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் பெரியாம் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமால் நேற்று தனது அறையை பூட்டி விட்டு சென்று உள்ளார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்து பார்த்தபோது தன்னுடைய அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த கம்ப்யூட்டர் மற்றும் டேட்டா பொருட்கள் திருட்டு போயிருந்தது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து திருட்டில் ஈடுப்பட்ட வர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் பெரியாம் பட்டியில் 2 கோவில்கள் மற்றும் பள்ளியில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பாலக்கோடு அரசுப் பள்ளியில் கழிப்பிட வசதி இல்லை என்று முதன்மை கல்வி அலுவலர் தகவல்
- 12 ஆம் வகுப்பு வரை 1358 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1358 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வ லர்களால் பள்ளியில் மாணவர்க ளுக்கு போதுமான கழிப்பிட வசதி உள்ளனவா என கேள்வி கேட்க ப்பட்டது.
இதற்கு பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் படி பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதுமான கழிப்பிட வசதி இல்லை எனவும், கழிப்பிடங்கள் கட்டிதர அரசிடம் அனு மதி கோரப்பட்டுள்ளது எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் அளித்துள்ளார். இது பொது மக்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பாலக்கோடு பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
- உயர்நீதி மன்ற உத்தரவு அடிப்படையில் நடவடிக்கை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மண்டி பின்புறம் உள்ள பேரூராட்சிக்குட்பட்ட இடத்தை கடந்த 20 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து தெரிகிறது. இதனை மீட்க பேரூராட்சி நிர்வாகம் முயற்சி செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிர மிப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டது, அதனை தொடர்ந்து 15 நாட்களுக்குள் தாமதிக்காமல் வீட்டை காலி செய்து இடத்தை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும், தவறினால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு நோட்டிஸ், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலையில் பேரூராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 7 வீடுகளிலும் குடியிருப்பவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி கையெழுத்து பெற்றனர். அறிவிப்பு வீட்டு கதவிலும் ஒட்டப்பட்டது.
- பாப்பாரப்பட்டி அருகே குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊட்டச்சத்து விழா நடைபெற்றது.
- 15 அங்கன்வாடி மையத்தினர் பங்கேற்பு
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே வேலம்பட்டி அங்கன்வாடி மையத்தில் சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
இதில் பென்னாகரம் வட்டாரத்தில் 177 அங்கன்வாடி மையங்களில் இருந்து பாப்பாரப்பட்டி பகுதியில் 15 அங்கன்வாடி மையத்தினர் வேலம்பட்டி ஊட்டச்சத்து மையத்தில் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறு தானிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றினால் வண்ணக் கோலமிட்டு கர்ப்பிணி பெண்கள் மற்றும் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய ஊட்டச் சத்துகள் குறித்து எடுத்து ரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளியின்
சமூக நலத்துறை மேற் பார்வையாளர்கள் விஜயலட்சுமி, சுமதி, ஒருங்கி ணைப்பாளர் அன்பரசன், பள்ளி தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியா ளர்கள் பொதுமக்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.
- பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.
- சமுதாய கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
தாழ்வான பகுதிகளின் வழித்தடங்கள், போக்குவரத்து விவரப்பட்டியல், அவரசகால போக்குவரத்து ஊர்திகளின் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் பற்றிய விவரப்பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை வெள்ள காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய தேவையான வாகனங்கள், தண்ணீர் டேங்க்குகள், போர்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள், உணவு சமைக்க பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள், நியாய விலைக்கடைகளில் தேவையான உணவு பொருட்களின் இருப்பு ஆகியன தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சாலையோர மரங்கள் சேதமடைந்தால் மீட்பு பணிக்கு ஜேசிபி, புல்டோசர், மரங்களை வெட்டும் இயந்திரங்கள், போர்டபில் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட் நல்ல நிலையில் பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் மழைநீர் தேங்காவண்ணம் முன்கூட்டியே சீர்படுத்த வேண்டும். அணைக்கட்டுகள், ஏரிகளின் கரைப்பகுதியில் தேவையான அளவிற்கு மணல் மூட்டைகளை அடுக்கி தயார் நிலையில் வைக்கவேண்டும்.
அவசரக்காலங்களில் உதவிக்கு அழைக்க சுய உதவி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல், தொலைபேசி எண்கள் பட்டியல் தயார் நிலையில் வைக்க வேண்டும். நடமாடும் மருத்துவ குழுக்கள், அவர்களின் தொலைபேசி எண் விவரங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்கும் முன்னரே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கா வண்ணம் தெருச்சாலைகள் சீர்படுத்த வேண்டும், கழிவுநீர்கால்வாய்களை துர்வார வேண்டும், தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து அடித்தும் குளோரின் பவுடர் தூவியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து குடிநீர் கிணறுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அனைத்தும் சுத்தப்படுத்தி தேவையான அளவு குளோரின் பவுடர் கலந்து குடிநீர் விநியோகம் செய்யவேண்டும்.
அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்கள் அனைத்திலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்நடை உயிர், மனித உயிர் சேதாரம் ஏற்படும் போது உடனடியாக நிவாரண உதவி வழங்க பிரேத பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் கால்நடை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எனவே, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் மழைக்காலங்களில் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதோடு அவசரத் தேவைகள், உதவிகள், பேரிடர் கால வீடு, கால்நடை, மனித உயிரிழப்பு , போக்குவரத்து பாதிப்பு, சேதங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நசீர் இக்பால், அனைத்து வட்டாட்சியர்கள் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தருமபுரி மாவட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டின் முக்கிய மாதம் ஆகும்.இந்த மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சிறப்பு பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது.புரட்டாசி முதல் சனிக் கிழமையை யொட்டி காலை முதலே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்க ளில் வழிபாடு செய்ய வரத்தொடங்கினர்.
அதன்படி தருமபுரி கோட்டையில் உள்ள வரமகாலட்சுமி பரவாசு தேவர் கோவில், செட்டிக் கரை ஸ்ரீ வெங்கட்ரமணா கோவில், பழைய தர்மபுரி வெங்கட்ரமணா கோவில், மூக்கனுர் ஆதிகேசவப் பெருமாள் கோவில், மணியம்பாடி ஸ்ரீவெங்கட் ரமணா கோவில், அதகப்பாடி பெருமாள் கோவில், எஸ், வி, சாலையில் உள்ள பெருமாள் கோவில், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, கடத்தூர், மொரப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் பொதுமக்கள் பூஜைப் பொருட்கள் மற்றும் துளசி மாலை உடன் வந்து பூஜை செய்தனர். பெருமாள் கோவில்களில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.
சிறப்பு அலங்கா ரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.






