என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    திருமணமான பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட மகேஷ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    தருமபுரி,

    தரு மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஜீட்டாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது 60). இவர் தருமபுரி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.இவருக்கு 6 மகள்கள், 1 மகன் உள்ளார். இவரது இரண்டாவது மகளான மகேஷ்வரியை 17 ஆண்டுகளுக்கு முன்பு கும்பார அள்ளி அருகே உள்ள குளளன் கொட்டாயை சேர்ந்த முருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து காணப்பட்ட மகேஷ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×