என் மலர்
உள்ளூர் செய்திகள்

மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
- அரூர் அருகே மான்வேட்டைக்கு சென்ற 4பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- நாட்டுத் தூப்பாக்கி மற்றும் தோட்டக்கள் பறிமுதல்
தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள சிந்தல்பாடி நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சோதனையின்போது அந்த வாகனத்தில் இருந்த ஒருவர் தப்பியோ டியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தில் மற்றவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் கொளகம்பட்டி காப்புக் காட்டில் மான்களை வேட்டையாடுவதற்காக வந்ததாக சிக்கிய 4 பேரும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், நடூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீபன் மகன் பிரபு (27), ராஜேந்திரன் மகன் விஜய் என்கிற சேர்வராயன் (28), மணி மகன் சதீஸ் (31), குப்புசாமி மகன் சுப்பிரமணி (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து மினி சரக்கு வாகனம், உரிமம் பெறாத ஒரு நாட்டுத் துப்பாக்கி, 15 தோட்டாக்கள் மற்றும் மான்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் மின்சாதன பொருள்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வனச்சட்டத்தின் படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.






