search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வுக்குழு கூட்டம்
    X

    கோவையில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வுக்குழு கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தீவிர ஆலோசனை
    • வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்குழு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட அளவில் நடக்கும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

    கோவையில் கலைஞர் மகளிர் உரிம தொகைக்காக 3 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு, அங்கு 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் 2,80,837 மனுக்கள் தொடர்பாக களஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சி, தோட்டக்கலைத்துறை மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் நேரடியாக களஆய்வு செய்யப்பட்டு உள்ளன.

    ேகாவை மாநகராட்சியில் கடந்த 2 நிதியாண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு, எஸ்.எப்.சி, என்.எஸ்.எம்.டி ஆகிய திட்டங்கள் மூலம் ரூ.278.74 கோடி மதிப்பீட்டில் 3743 சாலைப்பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் 942 பணிகள் முடிந்து விட்டன.

    உக்கடம் ஆத்துப்பாலம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்கார வீதி வரை மேம்பால நீட்டிப்பு பணிகள் நடக்கிறது.

    கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் முதல்கட்டமாக மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை ரூ.250 கோடி செலவில் 11.80 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மதுக்கரை முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ. தொலைவுக்கு சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் ஆனைமலை, தென்ச ங்கம்பாளையம், கிணத்துக்கடவு, வடசித்தூர், மதுக்கரை, செட்டிபாளையம், எஸ்.எஸ்.குளம், வெள்ளைமடை ஆகிய வட்டார பகுதிகளில் ரூ.1.58 கோடி செலவில் 317 வீடுகள் புனரமைக்கப்பட்டு உள்ளன.

    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத் தின்கீழ் கோவை மாவட் டத்தில் ஒட்டுமொத்தமாக 995 அரசு மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை படிக்கும் 62, 209 மாணவர்கள் பலன்பெற்று வருகின்றனர். காலை உணவு தரமாகவும், சுவையாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக்அலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோகிலா (பொது), கமலக்கண்ணன் (வளர்ச்சி), வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் துவராகநாத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×