search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ ஒட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்திடில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர்.

    ஆட்டோ ஒட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கார், வேண், ஆட்டோ, ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் கண்ணன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுத்திடவும், ஆண்லைன் அபராதத்தைதை கைவிடக் வேண்டும். ஆர்.டி.ஓ. காவல்துறை மாமுலை கட்டுபடுத்தி, இனைய வழி சேவையை தொடங்கிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பஜனைமட சந்து ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் விஸ்வநாதன், உரிமைக்குரல் ஓட்டுனர்கள் சங்க மண்டல தலைவர் பாலமுருகன், காளியாகுடி ஓட்டுனர் சங்க சி ஐ டி யு உறுப்பினர் ஜோதிக்கண்ணன் மற்றும். குத்தாலம் மணல்மேடு திருக்கடையூர் தேரிழந்தூர் ஆக்கூர் சீர்காழி திருமலைவாசல் வைத்தீஸ்வரன் கோயில் நீடூர் மயிலாடுதுறை ரயிலடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான, கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.

    பின்னர் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×