search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மறுநாள் சுதந்திர தின விழா கொண்டாட்டம்- நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் 4,500 போலீசார்
    X

    பாளை வ.உ.சி. மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடந்த போது எடுத்த படம்.

    நாளை மறுநாள் சுதந்திர தின விழா கொண்டாட்டம்- நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் 4,500 போலீசார்

    • கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • தண்டவாளங்களில் ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ங்களில் மாவட்ட நிர்வாக ங்கள் சார்பில் சுதந்திர தினவிழா கொண் டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அணிவகுப்பு ஒத்திகை

    இதற்காக 3 மாவட்டங்களிலும் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் நாளை மறுநாள் தேசிய கொடியை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தியாகிகள் கவுரவிக்கப் படு கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இதனையொட்டி கடந்த 3 நாட்களாக வ.உ.சி. மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தீயணைப்பு துறை யினர், காவல் துறையினர், ஊர்காவல் படையினர் இணைந்து அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    சுதந்திர தின விழாவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில் தென் மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 1,500 போலீசாரும், மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் அனிதா மேற்பார்வையில் 1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம், பணகுடி இஸ்ரோ மையம் உள்ளிட்ட இடங்கள், வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பாதுகாப்பு தொடர்பான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள், வாகன காப்பகங்களில் ரெயில்வே போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி கலெக்டர் ரவிச்சந்திரன் தேசிய கொடியேற்றுகிறார். மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கடலோர காவல்படையினர், மரைன் போலீசார் ஆகியோரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×